ஜனவரி 14 முதல் பெயர் மாற்றம் செய்யப்படும் டிடி பொதிகை!

'டிடி பொதிகை' தொலைக்காட்சி 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வரும் பொங்கல் திருநாளன்று மறு அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
dd, l.murugan
dd, l.murugantwitter

சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகை தகவல் பணியகத்தின் புதிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல், 'டிடி பொதிகை' தொலைக்காட்சி சேனலின் பெயர் 'டிடி தமிழ்' என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. விவாதம் உள்ளிட்ட பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் தொடங்கப்பட உள்ளன.

முன்பு அனைவரும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் டிடி தொலைக்காட்சியில், ஒலியும் ஒளியும் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோம். மேலும், டிடி நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com