’நீ இங்கதான் நிக்கணும்’ - வீரர்களைப் பிடித்து இழுத்து பீல்டிங் செட் செய்த ’மாஸ்டர்’ ’ரோகித்! வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கிற்கான இடத்தைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீல்டிங் படம்
பீல்டிங் படம்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று (மார்ச் 7) இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் க்ரெவ்லே 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களுடனும் சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 83 ரன்கள் பின்தங்கி உள்ளது.

பீல்டிங் படம்
ஒரேநாளில் சச்சின், கோலி சாதனைகள் முறியடிப்பு.. 8 சாதனைப் பட்டியலில் இணைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இந்த நிலையில், இன்று தொடங்கிய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா சில வீரர்களுக்கு, பீல்டிங் செய்வதற்கான ஏற்ற இடத்தை, அவர்கள் அருகேயே சென்று நிற்கவைத்து காண்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாகவும் இங்கிலாந்து அணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் ஒரு சில பீல்டர்களை மாற்றி அமைத்தார்.

பீல்டிங் படம்
“நீங்களே எடுத்துச் செல்லுங்கள்”- மைதானத்தில் மாறிமாறி பண்பால் நெகிழவைத்த அஸ்வின் - குல்தீப்! வீடியோ

குறிப்பாக, கொஞ்சமும் பொருத்தமுமில்லாமல் நின்றுகொண்டிருந்த சர்ஃபராஸ் கானை, அவர் அருகே சென்று பின்னாள் இழுத்து ஷார்ட் லெக்கில் நிறுத்தினார். அப்படியே லெக் ஸ்லிப் பகுதிக்குச் சென்ற ரோகித், அங்கு நின்றுகொண்டிருந்த ஜெய்ஸ்வாலை, அப்போது பேட் செய்துகொண்டிருந்த பேர்ஸ்டோவுக்குப் பின்னால் தனது காலால் அம்பு குறியிட்ட இடத்தில் கொண்டுபோய் நிறுத்தினார். இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வீடியோவைப் பார்க்கும்போது ரோகித் சர்மா, சிறு குழந்தைகளுக்கு பீல்டிங் கற்றுக் கொடுப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பீல்டிங் படம்
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com