“நீங்களே எடுத்துச் செல்லுங்கள்”- மைதானத்தில் மாறிமாறி பண்பால் நெகிழவைத்த அஸ்வின் - குல்தீப்! வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் திரும்பிய இந்திய வீரர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
aswin-kuldeep video
aswin-kuldeep videotwitter

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று (மார்ச் 7) இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் க்ரெவ்லே 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் நிறைவு பெற்றவுடன், இந்திய அணி வீரர்கள் பெவிலியன் திரும்பினர். அப்போது வீசிய பந்தை எடுத்துச் சென்றபடி, அணியை வழிநடத்துவதற்காக அஸ்வினும், குல்தீப் யாதவ்வும் விட்டுக் கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’நீங்கள்தான் டெஸ்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியுள்ளீர்கள்; தவிர, இன்று 100வது போட்டியிலும் ஆடியுள்ளீர்கள். ஆகையால் நீங்களே இந்தப் பந்தை எடுத்துச் செல்லுங்கள்’ என அஸ்வினிடம் கொடுக்கிறார் குல்தீப் யாதவ். ஆனால் அஸ்வினோ, ‘இல்லையில்லை, இங்கிலாந்தைக் குறைந்த ரன்களில் சுருட்டிய பெருமை உன்னையே சாரும்; உன் மாயஜால பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளாய். ஆகையால் நீ பந்து எடுத்துச் செல்வதுதான் சிறப்பு’ என அவரிடம் திரும்பப் பந்தை ஒப்படைக்கிறாய். ஆனால் அவரும் வாங்குவதாக இல்லை; அஸ்வினும் பெறுவதாக இல்லை. முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் அவர்களுக்கு இடையே புகுந்து சமரசம் செய்கின்றனர். இறுதியில் குல்தீப் யாதவ்வே அந்தப் பந்தை ரசிகர்களிடம் காட்டியபடி, எடுத்துச் செல்கிறார். அதற்குப் பின்பு அஸ்வின் அதைக் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com