ஒரேநாளில் சச்சின், கோலி சாதனைகள் முறியடிப்பு.. 8 சாதனைப் பட்டியலில் இணைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீர யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 சாதனைகளுக்குச் சொந்தக்காரராகி உள்ளார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று (மார்ச் 7) இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் க்ரெவ்லே 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
ISPL T10: சச்சின் பந்தை அடித்த சூர்யா.. தொடரைத் தொடங்கிவைத்த நட்சத்திரங்கள்.. வைரல் வீடியோ!

பின்னர் இந்திய அணியை வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மாவும், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்கினர். இந்திய அணி முதல்நாள் முடிவில் 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓர் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்!

ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். ஓர் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார். அவர் 9 இன்னிங்ஸில் 26* சிக்ஸர்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் சச்சின் உள்ளார். அவர் 25 சிக்ஸர்கள் (74 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 22 சிக்ஸர்களுடன் (20 இன்னிங்ஸ்) 3வது இடத்தில் உள்ளார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
1,110 ச.அடி பரப்பளவு! 5 கோடி மதிப்பிலான அப்பார்ட்மண்ட் வாங்கிய ஜெய்ஸ்வால்! எங்கு தெரியுமா?

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார். அவர் தற்போது வரை 712 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (655) மற்றும் ராகுல் டிராவிட் (602) ஆகியோர் உள்ளனர்.

ஓர் டெஸ்ட் தொடரில் எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடம்

ஓர் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் 3வது இடத்தைப் பிடித்தார். அவர் இந்த தொடரில் 712 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் சுனில் கவாஸ்கர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளார். 1971ஆம் ஆண்டு 774 ரன்களையும், 1978ஆம் ஆண்டு 732 ரன்களையும் எடுத்துள்ளார். கவாஸ்கரின் இந்தச் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 63 ரன்கள் தேவை. 2வது இன்னிங்ஸில் இதை முறியடிக்க அவருக்கு வாய்ப்புள்ளது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த 2வது இந்திய வீரர்

குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் 2வது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தில் வினோத் காம்ப்ளியும் (14 இன்னிங்ஸ்), 2வது இடத்தில் ஜெய்ஸ்வால் (16 இன்னிங்ஸ்), 3வது இடத்தில் புஜாராவும் (18 இன்னிங்ஸ்) உள்ளனர்.

குறைவான போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலிலும் இணைந்த ஜெய்ஸ்வால்

குறைவான போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் இடம்பிடித்தார். 9 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால், இதர 3 வீரர்களுடன் 2வது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் டான் பிராட்மேன் உள்ளார். அவர் 7 போட்டிகளில் இத்தகைய ரன்களை எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களின் அடிப்படையிலும் சாதனை

டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களின் அடிப்படையிலும் 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், இந்த ரன்களை 239 நாட்களில் எடுத்துள்ளார். மைக்கேல் ஹஸ்ஸி (166), எய்டன் மார்க்ரம் (185), ஆடம் வோக்ஸ் (207), ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் (227) ஆகியோர் இவருக்கு முந்தைய இடங்களில் உள்ளனர்.

இளவயதில் ஆயிரம் ரன்களை எடுத்த  இந்திய வீரர்களின் பட்டியலிலும் இடம்

டெஸ்ட் போட்டியில் மிக இளவயதில் ஆயிரம் ரன்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் தன்னை இணைத்துக் கொண்டார். அவர், 22 வயது 70 நாட்களில் இந்த ரன்களை எடுத்து 4வது இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் சச்சின் (19 வயது, 217 நாட்கள்), கபில் தேவ் (21 வயது, 27 நாட்கள்), ரவி சாஸ்திரி (21 வயது, 197 நாட்கள்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஆயிரம் ரன்களை எட்டி அதிகபட்ச பேட்டிங்கிலும் சராசரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டிய நேரத்திலும் அதிகபட்ச பேட்டிங் சராசரியைக் கொண்டிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் 3வது இடத்தைப் பிடித்தார். 71.43 சராசரியுடன் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் வினோத் காம்ப்ளி 83.33 சராசரியுடனும், 71.43 சராசரியுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com