‘MI கேப்டன் ஹர்திக்கா?’- கல்லூரியில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட போஸ்டரை அகற்றிய ரோகித் ரசிகர்கள்!

2024 ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்தவுள்ளார்.
ரோகித் - ஹர்திக்
ரோகித் - ஹர்திக்X

2024 ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு பிறகு, ஹர்திக் பாண்டியா தன்னுடைய குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியிருந்தார். தொடர்ந்து ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. அன்று முதல் இன்று வரை அணி நிர்வாகம் மீது ரோகித் சர்மா ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மாIPL

இருப்பினும் ரோகித் சர்மாவின் நீக்கத்தை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சரிதான் என்று ஒவ்வொருமுறையும் வலியுறுத்தி வருகிறது. ரோகித்தின் குடும்பத்தினருக்கேவும் இது சற்று அதிருப்தியையே கொடுத்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சமீபத்தில் மார்க் பவுச்சர் பேசிய வீடியோவில், ரோகித்தின் மனைவி கமெண்ட் செய்தது வைரலானது இங்கே நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரோகித் சர்மா ரசிகர்கள், தங்கள் கோவத்தை ஹர்திக் பாண்டியா மீது தற்போது திருப்பியுள்ளனர். அதனொருபகுதியாக கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா போஸ்டரை நீக்குமாறு ரோகித் சர்மா ரசிகர்கள் வலியுறுத்தியதாகவும், இறுதியில் அதை அவர்கள் நீக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் - ஹர்திக்
”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

மும்பை அணி கேப்டனாக வைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா போஸ்டர்!

‘ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகள் வென்றுகொடுத்த ஒரே கேப்டன் மற்றும் இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் வழிநடத்திவரும் ஒரு கேப்டனை, எப்படி ஒரு மோசமான முறையில் வெளியேற்றமுடியும்?’ என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது ரோகித்தின் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். அந்தவரிசையில்தான் தற்போது மும்பை கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்ட ஹர்திக் புகைப்பட போஸ்டர் வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது என சொல்லப்படுகிறது.

rohit - hardik
rohit - hardik

சம்பவத்தின்படி சமீபத்தில் மும்பையில் உள்ள முகேஷ் படேல் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக ஹர்திக் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவரை வரவேற்கும் விதமாக இந்திய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சித்தரித்து கல்லூரி நிர்வாகம் பிரமாண்ட போஸ்டர் ஒன்றை ஏற்பாடு செய்தது. இதைக்கண்டு “என்னது... மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவா?” என அதிருப்தியடைந்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள், ஹர்திக் அழைக்கப்பட்டதற்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் ஹர்திக் மும்பை அணியின் கேப்டன் என்ற போஸ்டரை அகற்றவேண்டும் எனவும் நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி உள்ளனர். தொடர்ந்த எதிர்ப்பால் ஹர்திக் பாண்டியாவின் போஸ்டர் அகற்றப்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் தொடக்க தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து விலகவும் இல்லை, வேறு அணிக்கு செல்லவும் இல்லை. ஆனால் இந்த சண்டைகள் மட்டும் ரோகித் ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

ரோகித் சர்மா மும்பை அணியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகளுக்கு இடையில், காயத்திலிருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் விதமாக நேற்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

முழு உடல்தகுதியுடன் திரும்பியிருக்கும் ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் விளையாடவுள்ளார்.

ரோகித் - ஹர்திக்
சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com