முறியடிக்கப்பட இருக்கும் சாதனைகள்... லிஸ்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா

ஆண்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய போட்டியாக நடத்தப்பட உள்ளது.
virat kohli, rohit sharma
virat kohli, rohit sharmapt web

20 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய போட்டி

ஆண்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய போட்டியாக நடத்தப்பட உள்ளது. 20 அணிகளும் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நான்கு குழுக்களில் இருந்து முதல் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

முதலில் க்ரூப் ஸ்டேஜ் அதன்பின் சூப்பர் 8 தொடர்ந்து நாக் அவுட் என 3 சுற்றுகளாக டி20 உலகக்கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்திய அணி குரூப் ஏ வில் இடம்பெற்றுள்ளது. குரூப் ஏவில் கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதிக பவுண்டரிகள்

இந்த தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயவர்த்தனே முதலிடத்தில் உள்ளார். இதுவரை அவர் 111 பவுண்டரிகளை அடித்துள்ளார். 103 பவுண்டரிகள் அடித்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளார். விராட் கோலி இந்த தொடரிலும் இடம்பெற்றிருப்பதால் ஜெயவர்த்தனேவின் சாதனைகள் முறியடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் 91 பவுண்டரிகள் அடித்திருக்கும் ரோஹித் சர்மா, நடக்க இருக்கும் தொடரில் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

virat kohli, rohit sharma
”தட்டிக்கொடுக்க சொன்ன தோனி” To ”இஷாந்த்-கோலி இடையான ஸ்பெஷல் நட்பு” - 2024 IPL-ன் 5 ’வாவ்’ மொமண்ட்ஸ்!

அதிவேக சதம்

அதிவேகமாக சதமடித்தவர்களது பட்டியலில் கிறிஸ் கெயில் 47 மற்றும் 50 பந்துகளில் சதமடித்து முதல் இரு இடங்களில் உள்ளார். இந்த சாதனையும் முறியடிக்கப்படுவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டர்கள், எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்ததை பார்த்தோம். உள்ளூர் அளவில் சாதனை படைத்த பந்துவீச்சாளர்கள், உலக அளவில் சாதித்த பந்துவீச்சாளர்கள் என பாரபட்சம் காட்டாது அனைவரையும் போட்டு விளாசினர் பேட்ஸ்மேன்கள்.

இதே சம்பவங்கள் உலகக்கோப்பையிலும் தொடர்ந்தால் நிச்சயம் அதிவேக சதங்கள் வாய்ப்புகள் உள்ளன. அதேவேளையில் கடந்த பிப்ரவரி மாதம் நமீபிய வீரர் ஜான் நிகோல் லோஃப்டீ, நேபாள் அணிக்கு எதிராக 33 பந்துகளில் சதமடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். எனவே, சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் அவரும் உள்ளார்.

அதிக கேட்ச்கள்

டி20 உலகக்கோப்பையில் அதிக கேட்ச்கள் பிடித்தவர்களது பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார். இதுவரை அவர் 23 கேட்ச்களை பிடித்த பீல்டராக முதலிடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 21 கேட்ச்களை பிடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் தற்போதைய தொடரில் இடம்பிடித்திருப்பதால் டிவில்லியர்ஸ் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இந்த ரேஸில் உள்ளனர். இருவரும் தலா 16 கேட்ச்களை பிடித்து பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளனர்.

virat kohli, rohit sharma
குபீர் மொமண்ட்| இவ்ளோ பண்ணியும் அவுட் பண்ண முடியலேயே! ஒரு பந்துக்கு ஓடும் 11 சிறுவர்கள்! #ViralVideo

அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு கோப்பைகளையும் ஆஸ்திரேலியாவே தன் வசம் வைத்துள்ளது. தற்போது டி20 உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியா வென்றால் ஒரே நேரத்தில் மூன்று வடிவ கோப்பைகளையும் வென்ற அணியாக ஆஸ்திரேலியா இருக்கும். இதைத்தாண்டி, ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற கோப்பைகளும் ஆஸ்திரேலிய வசமே உள்ளது.

ஒரு சீசனில் அதிக ரன்கள்

நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் விளையாட உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் 9 வரை விளையாடும் வாய்ப்புகளைப் பெறுகின்றன., இதன்காரணமாக ஒரு சீசனில் அதிக ரன்கள் என்ற விராட் கோலியின் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

2014-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் விராட் 6 போட்டிகளில் விளையாடி 319 ரன்களை எடுத்ததே சாதனையாக உள்ளது. தற்போது நடக்க இருக்கும் சீசனில் அது முறியடிக்கப்படலாம். ஏன் அதை விராட் கூட மீண்டும் முறியடிக்கலாம்.. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் கேப் அவர் வசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

virat kohli, rohit sharma
”சிறுவயதில் 10ரூ கிடைக்காதா என்று இருந்தேன்..” - குறைவான சம்பளம் குறித்து துறவியை போல் பேசிய ரிங்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com