குபீர் மொமண்ட்| இவ்ளோ பண்ணியும் அவுட் பண்ண முடியலேயே! ஒரு பந்துக்கு ஓடும் 11 சிறுவர்கள்! #ViralVideo

கிரிக்கெட்டில் ஒரு ரன்அவுட் செய்ய 11 சிறுவர்கள் ஓடியும், கடைசிவரை அவுட்செய்யமுடியாமல் தவறிப்போன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Funny Mistake in Cricket
Funny Mistake in CricketX

பொதுவாக கிரிக்கெட் எந்தளவு தீவிரமான விளையாட்டாக இருக்கிறதோ, அதேஅளவு பல்வேறு கலாட்டாக்களையும், காமெடியான விசயங்களையும் உள்ளடக்கியது. பல சாதனை நிகழ்வுகளை விட, சில சிரிப்பலைகளை கொடுக்கக்கூடிய விசயங்கள் எப்போதும் வைரல் டெம்ப்ளேட்டாக மாறி அழியாமல் வலம்வரும்.

எடுத்துக்காட்டாக, 2 பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் பிடிப்பார் என மற்றொருவர் விட்டுவிட்டு கேட்சை தவறவிடுவது, பந்து பவுண்டரி லைனுக்கு சென்றுவிட்டது என நினைத்து நடுபிட்ச்சில் சென்று பேசிக்கொண்டிருந்து ரன்அவுட் ஆவது என பல காமெடியான சம்பவங்கள் எப்போதும் டெம்ளேட்டாகவே மாறியுள்ளன.

அந்தவகையில் தற்போது சிறுவர்கள் கிரிக்கெட்டில் நடந்த ரன்அவுட் ஒன்று சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Funny Mistake in Cricket
’Toss போடுவதில் ஏமாற்றிய MI?’ முதல் ‘கைக்கொடுக்காமல் சென்ற தோனி’ வரை! 2024 IPL-ன் டாப் 5 சர்ச்சைகள்!

ஜஸ்ட் மிஸ்ல தவறிப்போன ரன்அவுட்!

வைரலாகும் வீடியோவில், ”சிறுவர்களுக்கு இடையேயான போட்டி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் ஒருவர் ஃபீல்டர் இருக்கும் திசையிலேயே பந்தை அடித்துவிட்டு ரன்னுக்கு செல்கிறார். ஆனால் நான்-ஸ்டிரைக்கில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேன் பந்து ஃபீல்டரிடம் செல்வதை பார்த்து, ரன்னுக்கு செல்லாமல் பின்வாங்கிவிடுகிறார். ஆனால் பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் அதற்குள் மறுமுனைக்கே ஒரு ரன்னுக்கு ஓடிவந்துவிடுகிறார்.

இப்போது எப்படியும் ரன் அவுட் செய்துவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அங்கதான் டிவிஸ்ட்ட வச்சிருக்காங்க எதிரணியினர். ஓடிகூட போகவேண்டாம், நடந்து சென்று ஸ்டம்பை கையில் எடுத்திருந்தால் கூட அவுட் செய்திருக்கலாம். ஆனால் நின்ற இடத்திலிருந்தே ஸ்டம்ப் அடிக்க முயலும் சிறுவர்கள், ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கும், மீண்டும் மறுமுனையிலிருந்து எதிமுனைக்கும் பந்தை வீசுகிறார்கள். ஆனால் ஒருவர் கூட ஸ்டம்பை அடிக்கவில்லை, அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பேட்ஸ்மேன்கள், அப்போது தான் ரன்அவுட்டே ஆகவில்லை என்பதை புரிந்துகொண்டு மீண்டும் ஓடிப்போய் தங்கள் விக்கெட்டை விழாமல் காத்துக்கொள்கிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால், அந்த ஒரு ரன் அவுட்டை செய்ய 11 வீரர்களும் ஓடுவது தான். பாவிங்களா கடைசிவரை ரன்அவுட் பண்ணலேயே நீங்க! எங்களுக்கு வருத்தம் பா!

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Funny Mistake in Cricket
”சிறுவயதில் 10ரூ கிடைக்காதா என்று இருந்தேன்..” - குறைவான சம்பளம் குறித்து துறவியை போல் பேசிய ரிங்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com