RCB vs MI
RCB vs MIcricinfo

3 தோல்வி.. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கேவுடன் இணைந்த MI.. ஆர்சிபி அசத்தல் வெற்றி!

நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில் வான்கடேவில் வைத்தே மும்பையை வீழ்த்தியது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி.
Published on
Summary

வான்கடே மைதானத்தில் ஆர்சிபி 240 ரன்கள் குவித்து மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சால்ட், கோலி, பட்டிதார், டிம் டேவிட் ஆகியோரின் அதிரடி பேட்டிங், சுயாஷ் சர்மா, க்ருணால் பாண்டியா பந்துவீச்சு மும்பையை சிக்கலில் ஆழ்த்தின. ரூதர்ஃபோர்டின் போராட்டம் வீணாக, 4 போட்டியில் 3 வெற்றி பெற்ற ஆர்சிபி 2வது இடத்தில் உறுதியாகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வுசெய்ய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கே 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

ஃபிலிப் சால்ட்
ஃபிலிப் சால்ட்

அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஃபிலிப் சால்ட் 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 78 ரன்கள் விளாசினார். மறுபக்கம் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய விராட் கோலி 50 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார் நாலாபுறமும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 20 பந்தில் அரைசதமடித்து அசத்தினார்.

rcb scored 240 runs against mi
rcb scored 240 runs against micricinfo

கடைசியாக வந்து 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என விளாசிய டிம் டேவிட் 34 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆர்சிபி 240 ரன்களை குவித்தது. தொடர்ந்து 4 போட்டிகளாக மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர பவுலர் பும்ரா விக்கெட் இல்லாமல் சென்றது அவ்வணிக்கு பாதகமாக அமைந்தது.

RCB vs MI
MI-க்கு எதிராக ஒரே வீரர்.. விராட் கோலி படைத்த 2 பெரிய சாதனைகள்!

சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த மும்பை அணி..

241 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை எட்டி நன்றாகவே தொடங்கியது. ஆனால் தொடக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்ட ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேற, ஆர்சிபி அணியின் ஸ்பின்னர் சுயாஷ் சர்மா ஒரே ஓவரில் ரிக்கல்டன் மற்றும் திலக் வர்மா இருவரையும் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

rohit sharma
rohit sharma
RCB vs MI
இளம் வீரராக கில் படைத்த மிரட்டல் சாதனை.. லக்னோவை வீழ்த்தி GT அபார வெற்றி!

4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நம்பிக்கை கொடுத்தாலும், சரியான நேரத்தில் 33 ரன்னில் சூர்யாவை அவுட்டாக்கிய க்ருணால் பாண்டியா அசத்தினார். மிகப்பெரிய இலக்கு என்பதால் அழுத்தம் கூட அடிக்க முயன்று ஹர்திக் பாண்டியாவும் 40 ரன்னில் வெளியேறினார்.

கடைசிவரை நிலைத்து நின்று 9 சிக்சர்களை ஷர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் பறக்கவிட்டாலும் 20 ஓவரில் 222 ரன்களை மட்டுமே மும்பை அணியால் எடுக்கமுடிந்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.

ஷர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்
ஷர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்

4 போட்டிகளில் 3 தோல்வியை சந்தித்திருக்கும் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியுடன் இணைந்து, MI 8வது இடத்திலும், சென்னை 9வது இடத்திலும் நீடிக்கின்றன.

RCB vs MI
"IPL கிரிக்கெட்டே இல்லை அது ஒரு சினிமா; PSL தான் நிஜ கிரிக்கெட்" - SA வீரர் சர்ச்சை கருத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com