ஜடேஜா உடன் கைக்கோர்க்கும் 3 இந்திய ஸ்பின்னர்கள்.. ராஜஸ்தானின் பிரிலியண்ட் Buys!
2026 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜா உடன் இணைந்து 3 இந்திய ஸ்பின்னர்களை வாங்கி அணியின் பந்துவீச்சு வலிமையை அதிகரித்துள்ளது. 3 இளம் வீரர்களை தங்களுடைய அணியில் சேர்த்துள்ளது. இந்த மாற்றம், அணியின் எதிர்கால வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கலாம்.
2026 ஐபிஎல் ஏலமானது அபுதாபியில் பரபரப்பாக நடந்துவருகிறது. எதிர்ப்பார்க்கப்பட்டதை போல கேமரூன் க்ரீன் 25.20 கோடிக்கு சென்ற நிலையில், எதிர்ப்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணி வெளியிட்ட மதீசா பதிரானா 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் கவனிக்கவைக்கும் ஏலமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னோய் இருவரும் இருந்தனர்.
அனைத்திற்கும் மேலாக அன்கேப்டு வீரர்களான பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற வீரர்கள் தலா 14.20 கோடிக்கும், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்யூப் நபி 8.40 கோடிக்கும் சென்று கவனம் ஈர்த்தனர்.
ஒவ்வொரு அணியும் தங்களுடைய இடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்திய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவர்களுடைய இடங்களுக்கான முக்கிய தேவையை பூர்த்தி செய்தது.
3 ஸ்பின்னர்களை தட்டித்துக்கிய ராஜஸ்தான்..
சென்னை அணியிலிருந்து ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்ற நிலையில், அவர்களுடைய 2 பிரைம் ஸ்பின்னர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் தீக்ஷனா இரண்டு பேரையும் வெளியேற்றியது ராஜஸ்தான் அணி. இந்தசூழலில் அவர்களுக்கு இந்திய லெக் ஸ்பின்னர் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் தேவை அதிகமாக இருந்தது. அதை சரியாக பூர்த்தி செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்தியாவின் வளர்ந்து ஸ்பின்னராக இருந்துவரும் ரவி பிஸ்னோயை 7.20 கோடிக்கு விலைக்கு வாங்கிய ராஜஸ்தான் அணி, விக்னேஷ் புதூர் மற்றும் யஷ் ராஜ் புஞ்சா என்ற இரண்டு இளம் ஸ்பின்னர்களையும் தலா 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.
விக்னேஷ் புதூர் கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கலக்கியிருந்த நிலையில், 19 வயது இளம் லெக் ஸ்பின்னரான யஷ் ராஜ் புஞ்சா மஹாராஜா டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பவுலராக இருந்தார். 10 போட்டிகளில் விளையாடி 12 சராசரியுடன் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யஷ் ராஜ். ஏற்கனவே ஜடேஜா திடமான ஸ்பின்னராக இருக்கும் நிலையில், தற்போது 3 இந்திய ஸ்பின்னர்களை விலைக்கு வாங்கி அணியை வலுப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அணி.

