\
R Ashwin Reply As Fan Says on CSK Coach
ரவிச்சந்திரன் அஸ்வின்pt web

தொடர் தோல்வி | CSK-வுக்கு பயிற்சியாளரா? சாடிய பயனருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!

CSK-இன் அடுத்த பயிற்சியாளராக கூடாது என்ற ரசிகரின் கருத்துக்கு முன்னாள் இந்திய அணி வீரரான ரவிசந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
Published on

ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 ஐபிஎல் தொடரில், தொடர் தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்புகளை இழந்து வெளியேறியது. இதன்மூலமாக csk அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான csk அணி 2026 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

CSK, 2026
CSK, 2026csk

ஏற்கெனவே, முன்னாள் கேப்டன் தோனி ஒரு போட்டியில்கூட ஆடும் லெவனில் இறக்கப்படாத நிலையில், அதுவே ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கேவின் அடுத்தசுற்றும் பறிபோன நிலையில் அவ்வணி மீது மேலும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. அந்த வகையில், அணி வீரர்களின் எதிர்காலம் குறித்தும் மேலும் அணியின் பயிற்சியாளர்கள் மாற்றங்களை குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

R Ashwin Reply As Fan Says on CSK Coach
இன்று தான் தோனிக்கு கடைசி போட்டியா..? வைரலாகும் செய்திக்கு இடையே ட்விஸ்ட் வைத்த அஸ்வின்!

இந்தச் சூழ்நிலையில் ரசிகர் ஒருவர், "பயிற்சியாளர் பொறுப்பை யார் ஏற்றாலும், அது ரவி அஸ்வினாக இருக்கக் கூடாது. மேலும் அவர், தனது யூடியூப் தளங்கள் மூலம் சில காசுகளைச் சம்பாதிப்பதற்காக போட்டிக்கு முன்பே ஆடும் 11 வீரர்களை அறிவிப்பார்" எனப் பதிவிட்டார். இது சர்ச்சையான நிலையில், அஸ்வின் அதற்குப் பதிலடி கொடுத்தார்.

அவர், "உங்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்! நான் 11 வீரர்களை அறிவித்து, பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திட்டங்களையும் எதிரணிக்குத் தெரியப்படுத்துவேன். மேற்கூறியவை ஊழல் தடுப்பு பிரிவு என்னை கேள்வி கேட்க வைப்பதோடு, எனது தோல்விக்கும் வழிவகுக்கும். உங்களுக்கு விதிகள் தெரியுமா? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எம்.எஸ்.டி இருக்கும்போது, ​​நீங்கள் ஏன் வேறு யாரைத் தேடுகிறீர்கள்?" எனப் பதிலடி கொடுத்தார்.

R Ashwin Reply As Fan Says on CSK Coach
'Zero Sense'| சிஎஸ்கே தோல்விக்கு ருதுராஜை விமர்சித்த முன்னாள் வீரர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com