\
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்bcci

'Zero Sense'| சிஎஸ்கே தோல்விக்கு ருதுராஜை விமர்சித்த முன்னாள் வீரர்!

பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தும் தொடரிலிருந்து வெளியேறிய லக்னோ அணியிடம் தோற்று இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது சென்னை அணி.
Published on
Summary

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோவிடம் தோல்வியடைந்ததால் சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலில் சிக்கியது. மிட்செல் மார்ஷின் 90 ரன்கள், லக்னோவுக்கு 7 விக்கெட் வெற்றியைத் தந்தது. இந்த தோல்விக்குப் பிறகு முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், அணித்தேர்வு தவறுகள் தொடர்ச்சியாக நடப்பதாக ருதுராஜ் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார்.

2026 ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். ஆனால் அவர்கள் வெளியேறியது மட்டுமில்லாமல் கடைசி இரண்டு போட்டியில் பஞ்சாபை மும்பை வீழ்த்தியும், சென்னையை லக்னோ வீழ்த்தியும் அவர்களுக்கான பிளேஆஃப் வாய்ப்பை இருட்டாக்கியுள்ளனர்.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

நேற்று நடைபெற்ற போட்டியில் 187 ரன்கள் மட்டுமே அடித்த சென்னை அணியால் மிட்செல் மார்ஷின் ஆக்ரோசமான பேட்டிங்கிற்கு முன்னால் சமாளிக்க முடியவில்லை. 90 ரன்கள் அடித்த மார்ஷின் ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026

இந்நிலையில் தான் தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிக்கும் பதிவில், “அணித்தேர்வில் செய்த தவறுகளின் காரணமாகவே CSK தோல்வியடைந்தது, இந்த சீசனில் இதுவொரு வழக்கமாகவே மாறி வருகிறது. இத்தகைய ஆடுகளத்தில் அகீல் ஹொசைனை அணியிலிருந்து நீக்கி வைத்ததில் துளியும் அர்த்தமில்லை. மற்றொரு ஆட்டத்தில் கையிலிருந்த வாய்ப்பு தவறிப்போயுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com