\
தோனி
தோனிX

இன்று தான் தோனிக்கு கடைசி போட்டியா..? வைரலாகும் செய்திக்கு இடையே ட்விஸ்ட் வைத்த அஸ்வின்!

தோனி இன்று தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்ற செய்தி இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
Published on
Summary

2026 ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்புக்காக போராடும் சிஎஸ்கே, லக்னோவிடம் தோல்வியால் 47% இலிருந்து 28% ஆக குறைந்த சாத்தியத்தை, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் தோல்வியால் மீண்டும் உயர்த்தியுள்ளது. இதே நேரத்தில் சென்னையில் நடைபெறும் SRH போட்டி தோனியின் கடைசி ஆட்டமா என்ற கேள்வி எழ, டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

2026 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கடினமானதாக உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணியின் வாய்ப்பு 47%-லிருந்து 28%ஆக குறைந்தது. ஆனால் அடுத்தடுத்த போட்டியில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் அணிகள் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் சிஎஸ்கேவின் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

சிஎஸ்கேவில் ஃபினிசிங் வீரருக்கான தேவையிருந்துவரும் நிலையில், மகேந்திர சிங் தோனி இன்று நடக்கும் SRH அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்றும், இதுதான் தோனியின் கடைசி போட்டி என்றும் சொல்லப்படுகிறது. அதற்கேற்றார்போல் தோனி அரைமணிநேரம் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்டிங் பயிற்சி மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப்போட்டி சென்னையில் நடைபெறுவதால் தோனி நிச்சயம் களமிறங்குவார் என்ற செய்தி தீயாய் பரவிய நிலையில், டிக்கெட் விற்பனையும் பரபரப்பாக நடந்துமுடிந்துள்ளது. தோனி உண்மையில் ஓய்வுபெறப்போகிறாரா? என்ற கேள்வி சுழன்றுவரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் எக்ஸ் தள பதிவு அதனை மறுக்கும்வகையில் உள்ளது.

தோனி
ராஜஸ்தானை தோற்கடித்த டெல்லி.. 5 அணிகளுக்கு திறக்கப்பட்ட Playoff கதவு!

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அஸ்வின், “இன்று இது நடக்காது! ஒருவேளை 2027-ல் நடக்கலாம், பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் நடக்கும் என்று தோன்றவில்லை. அகீல் ஹொசைன் விளையாட வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் இன்று கட்டாயம் வெல்லவேண்டிய போட்டியில் சிஎஸ்கே விளையாடுவதால், தோனி களமிறங்கும் பட்சத்தில் அவரின் அனுபவம் அணிக்கு கைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தோனி
Play Off Record | சிஎஸ்கேவை நெருங்கும் ஆர்சிபி.. பிளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com