pbks 2026
pbks 2026web

இன்று தோற்றால் பஞ்சாப் கிங்ஸ் வெளியேறும்..? மோசமான நிலையில் ஸ்ரேயாஸ் அணி!

முதல் 7 போட்டிகளில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிநடை போட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டியிலும் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் 7 போட்டிகளில் தோல்வியில்லாமல் பயணித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், தற்போது தொடர்ச்சியாக 4 தோல்விகளால் பிளேஆஃப் வாய்ப்பு ஆபத்தில் உள்ளது. 11 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு புள்ளி பகிர்வு மூலம் 13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் பஞ்சாப், மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகளை கட்டாயமாகப் பெற வேண்டும்.

2026 ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, முதல் 7 போட்டியில் தோல்வியே இல்லாமல் 6 வெற்றிகளை பதிவுசெய்து மிரட்டியது. கொல்கத்தாவிற்கு எதிரான ஒரு போட்டி மழையால் தடைபட்டு புள்ளிகள் பிரித்துகொடுக்கப்பட்டன.

பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் cricinfo

இந்தசூழலில் அந்த அணி எளிதில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது பஞ்சாப் அணி.

இந்நிலையில் இன்றைய முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது பஞ்சாப் கிங்ஸ்.

pbks 2026
CSK-வுக்கு மேலும்மேலும் மரண அடி.. பிளே ஆப் நெருங்கும் வேளை.. வெளியேறிய முக்கிய வீரர்!

தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு..?

11 போட்டிகளின் முடிவில் 6 வெற்றி, ஒரு போட்டி புள்ளிபகிர்வு என 13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. மீதமிருக்கும் 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது ஸ்ரேயாஸின் படை.

shreyas iyer pbks captain
shreyas iyer pbks captain

இந்தசூழலில் பிளேஆஃப்க்கு தகுதிபெற வேண்டுமானால் மீதமிருக்கும் 3 போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டில் பஞ்சாப் வெல்ல வேண்டும். 2 போட்டியில் வென்றால் 17 புள்ளிகளுடன் பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பை உறுதிசெய்யும்.

ஒருவேளை இரண்டு போட்டிகளில் வெல்லவில்லை என்றால் அடுத்த இடங்களில் உள்ள சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் வில்லனாக மாற வாய்ப்புண்டு. 11 போட்டிகள் முடிவில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 5வது மற்றும் 6வது இடங்களில் சிஎஸ்கே, ஆர்ஆர் அணிகள் நீடிக்கின்றன.

pbks 2026
’10 டி20 சதங்கள்.. 14000 டி20 ரன்கள்..’ ஒரே போட்டியில் 8 சாதனை படைத்த கோலி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com