”2 ஓவர்களில் ஆட்டத்தையே மாத்திடுவாங்க”-ஆஸி. குறித்து இந்திய அணிக்கு முன்பே எச்சரித்த பாக். வீரர்கள்!

2023 உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்டதால், தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
india team
india teamtwitter

இந்திய அணியின் தோல்வி குறித்து அதிக விமர்சனம்

வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்த உலகம் பேசத்தான் செய்யும். அதிலும் தோல்வியடைந்துவிட்டால் போதும், சொல்லவே வேண்டியதில்லை. அப்படியான ஒரு சூழ்நிலைக்குத்தான் இந்திய கிரிக்கெட் அணி, தற்போது தள்ளப்பட்டு உள்ளது.

நாக் அவுட் போட்டிக்கு முன்பாக, தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற பிறகு, எல்லோரும் விமர்சனம் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிலும் இந்திய அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கூறியிருப்பதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், ஆஸ்திரேலிய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், அந்த அணியிடமிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டிய பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: கோலியின் 48-வது சதம் சாத்தியமானது எப்படி.. இந்திய தோல்விக்கு நடுவரைக் காரணம் கூறுவது நியாயமா?

முன்பே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்கள்..

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியா குறித்து பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், “ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில் தோல்வியுற்றால் இந்தத் தொடரில் மற்ற எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

அதை மீண்டும் பகிர்ந்து, “ஒரு மாதத்திற்கு முன்பே சொன்னேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆம், அவர் சொன்னபடி, லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்றிருந்தது. ஆனால், அதற்குப் பின் அசுர வளர்ச்சி பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி உலகக்கோப்பையைத் தட்டித் தூக்கிச் சென்றுவிட்டது.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: வெற்றி கைநழுவிப் போனது எப்படி..? இந்தியா தோற்றதற்கு மிக முக்கிய 5 காரணங்கள்!

”சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா முன்னேறுகிறது”

இதேபோல் மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாக்கார் யூனிஸ், அக்டோபர் 21ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ”சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா முன்னேறுகிறது. அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவை, ஆஸ்திரேலிய அணியிடம் பாகிஸ்தான் வீழ்ந்தபிறகு தெரிவித்திருந்தார். தற்போது, அந்த ட்வீட்டை மீண்டும் பகிர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரோகித், கோலி, ஷமி... கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

”ஆஸி. 2 ஓவரில் எதிரணியை நிலைகுலைய வைக்கும்”

மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரரான மிஸ்பா உல் ஹக், ”இந்திய அணி லீக் சுற்றில் வெற்றிகளைக் குவித்தாலும், அரைஇறுதி, இறுதிப் போட்டி போன்ற நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணியிடம் ஒரு பலவீனம் வெளிப்படும். அதைவைத்து இரண்டே ஓவரில் எதிரணி, இந்தியாவை நிலைகுலைய வைத்துவிடும்” என அவர் எச்சரித்து இருந்தார். இதுகுறித்து அவர், ”இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளைப் பெற்று வருவது அரை இறுதி, இறுதிப் போட்டியில் சிக்கலை ஏற்படுத்தும். தொடர்ந்து வெற்றி பெறுவதால் இந்திய அணி உச்சத்தில் இருக்கிறது.

அப்படி தோல்வியே அடையாமல், பெரிய தவறுகளே செய்யாமல் உச்ச நிலையில் இருக்கும்போது, இந்திய அணிக்கு நாக்-அவுட் போட்டிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே இந்த உலகக்கோப்பை தொடரில் தோல்விகளைச் சந்தித்துவிட்ட ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அத்தனை அழுத்தம் இருக்காது” என்பதை சுட்டிக் காட்டி, ”இந்திய அணிக்கு இரண்டு ஓவர்கள் அழுத்தம் கொடுத்தாலே நிலைகுலைந்து விடும். அந்த அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் இந்தியா தவிக்கும்” எனக் கூறி இருந்தார் மிஸ்பா உல் ஹக். அதன்படி, நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 10 ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணி 11 மற்றும் 12 ஓவர்களில் அழுத்தத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2014 டூ 2023: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியும் இந்திய அணி தவறவிட்ட 9 ஐசிசி கோப்பைகள்!

”இந்திய அணி சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவில்லை”

மற்றொரு பாகிஸ்தான் வீரரான சோயிப் மாலிக், “போட்டி நடந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் நீள்வட்டத்தில் இருந்ததால், அதை ஆஸ்திரேலியா சரியாகப் பயன்படுத்தியதாகவும், ஆனால், இந்திய அணி தன் சொந்த மண்ணிலேயே சூழ்நிலைகளைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

மேலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வகைவகையாக பந்து வீசினார்கள். இந்தியர்களைவிட சிறப்பாக இந்திய சூழ்நிலைகளை கணித்து, திட்டமிட்டு ஆடி இருக்கிறது ஆஸ்திரேலியா" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: WC2023: 6வது முறையாக சாம்பியன்.. வரலாற்றை மாற்றி எழுதிய ஆஸ்திரேலியா! இந்தியாவின் போராட்டம் வீண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com