2014 டூ 2023: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியும் இந்திய அணி தவறவிட்ட 9 ஐசிசி கோப்பைகள்!
2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டுமுறை சாம்பியனான இந்தியாவும் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவ்விரு அணிகளும், இன்று (நவ. 19) குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின.
இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
அவ்வணியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58* ரன்களும் எடுத்தனர். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி, கடந்த 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் வெற்றிபெற்று ஐந்து முறை சாம்பியனாகி இருந்தது. தற்போது 6வது முறையாகக் கோப்பையை வென்று, மீண்டும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
நாக் அவுட் முன்னேறி இந்தியா இழந்த ஐசிசி கோப்பைகள்
இந்த நிலையில், ஐசிசி நடத்தும் தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரை முன்னேறியும் இந்திய அணி, பல கோப்பைகளை இழந்துள்ளது. இந்திய அணி, தவறவிட்ட கோப்பைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
2014, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி
2015, ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி
2016, டி20 உலகக்கோப்பை அரையிறுதி
2017, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
2019, ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி
2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
2023 நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டி