ind vs pak semi final match called off
ind vs pakweb

IND vs PAK அரையிறுதிப் போட்டி அதிகாரப்பூரவமாக ரத்து.. ஃபைனல் சென்றது பாகிஸ்தான்!

2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜென்ட்ஸ் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதவிருந்த நிலையில், இந்திய வீரர்கள் பங்கேற்க மறுத்ததால் போட்டி ரத்துசெய்யப்பட்டது.
Published on

முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக்கின் இரண்டாவது சீசன் கடந்த ஜுலை 18-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றன.

இந்தியா சாம்பியன்ஸ் அணியில் கேப்டனாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, இர்ஃபான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 13.2 ஓவரில் 145 ரன்களை சேஸ்செய்த இந்தியா சாம்பியன்ஸ் அணி, உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக்கின் அரையிறுதிக்குள் காலடி வைத்தது. கடைசி 7 ஓவரில் 93 ரன்கள் அடித்தால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை பெறும் என்ற சூழலில், அதிரடியாக ஆடிய இந்தியா வெஸ்ட் இண்டீஸை தொடரிலிருந்து வெளியேற்றியது.

இந்த சூழலில் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் உடன் மோதும் சூழல் உருவான நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்ற முடிவை இந்திய வீரர்கள் எடுத்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான அரையிறுதிப்போட்டி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ind vs pak semi final match called off
’நாடு தான் முக்கியம்..’ அரையிறுதியில் IND vs PAK மோதல்.. ஸ்பான்சரில் இருந்து விலகிய இந்திய நிறுவனம்!

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்..

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip
IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip web

இந்த சூழலில் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதை அடுத்து இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தபோட்டியில் இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்ததால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான அரையிறுதிப்போட்டியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் நிலையில், இன்று நடக்கவிருக்கும் மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸை எதிர்த்து தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் விளையாடவிருக்கிறது.

ind vs pak semi final match called off
யாரு சாமி நீ..! 8 பந்தில் 5 விக்கெட்டுகள்.. உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com