IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip
IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip web

’நாடு தான் முக்கியம்..’ அரையிறுதியில் IND vs PAK மோதல்.. ஸ்பான்சரில் இருந்து விலகிய இந்திய நிறுவனம்!

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் லெஜெண்ட்களுக்கான உலக சாம்பியன்ஷிப் டி20 லீக் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடும் சூழல் உருவாகியுள்ளது.
Published on

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றன.

நடப்பு தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றதால் ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ind vs pak
ind vs pak

இந்த சூழலில் பரபரப்பாக நடந்துவந்த தொடர் அரையிறுதிப்போட்டியை எட்டியிருக்கும் நிலையில், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

இந்நிலையில் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதவிருக்கின்றன. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்களா மாட்டார்களா என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில், WCL தொடரின் தலைமை ஸ்பான்சர் நிறுவனமான easemytrip போட்டிக்கான ஸ்பான்சரிலிருந்து விலகுவதாகவும் ‘பயங்கரவாதமும், கிரிக்கெட்டும் கைக்கோர்த்து செல்ல முடியாது’ என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip
WCL | Ind - Pak போட்டி ரத்து.. புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ள மறுக்கும் பாகிஸ்தான்!

‘பயங்கரவாதமும், கிரிக்கெட்டும் கைக்கோர்த்து செல்ல முடியாது..

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப்போட்டியிலும் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவிப்பார்களா என்ற கேள்வி எழும் நிலையில், இந்திய வீரர்களுக்கு முன்னதாக போட்டியின் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக easemytrip நிறுவனம் அறிவித்துள்ளது.

ind vs pak
ind vs pakweb

புது டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்திய டிராவல் நிறுவனமான easemytrip உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் டி20 லீக்கின் தலைமை ஸ்பான்சராக 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிக்கான ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் easemytrip நிறுவனரான நிஷாந்த் பிட்டி, “உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்தியா சாம்பியன்ஸ் அணியை நாங்கள் பாராட்டுகிறோம், நீங்கள் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் அரையிறுதி வெறும் விளையாட்டு அல்ல, பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் கைகோர்த்து செல்ல முடியாது.

EaseMyTrip-ஆன நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடனான உறவுகளை இயல்பாக்க முயற்சிக்கும் எந்த நிகழ்வையும் நாங்கள் ஆதரிக்க விரும்பவில்லை. இந்திய மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர், நாங்கள் அவற்றைக் கேட்கிறோம், அவற்றிற்கு மதிப்பு கொடுக்கிறோம். WCL-ல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியுடன் EaseMyTrip எந்த தொடர்பிலும் இருக்காது. சில விஷயங்கள் விளையாட்டை விட பெரியவை. தேசம் தான் எப்போதும் முதலில், பின்னர் தான் வணிகம். ஜெய் ஹிந்த் 🇮🇳” என பதிவிட்டுள்ளார்.

இந்திய நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகிய நிலையில் இந்திய வீரர்களும் விளையாட மறுப்பு தெரிவிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

IND vs PAK போட்டி ஸ்பான்சரிலிருந்து விலகிய easemytrip
WCL : வயசானாலும் ஸ்டைல், மாஸ் குறையல.. 41 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com