உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்
உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்web

யாரு சாமி நீ..! 8 பந்தில் 5 விக்கெட்டுகள்.. உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்!

எஸ்டோனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்தார் பின்லாந்து வீரர்.
Published on

எஸ்டோனியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த பின்லாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதல் போட்டியில் பின்லாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் எஸ்டோனியா வெற்றிபெற்று 1-1 என தொடரை சமன்செய்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் பின்லாந்து பவுலர் மகேஷ் தாம்பேவின் அற்புதமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற பின்லாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது.

உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்..

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எஸ்டோனியா, 14 ஓவருக்கு 100/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் அடுத்தடுத்த 2 ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 40 வயதான மகேஷ் தாம்பே உலக சாதனையை படைத்தார்.

17வது ஓவரின் 3வது, 4வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டை வீழ்த்திய தாம்பே, 7வது மற்றும் 8வது பந்தில் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கு முந்தைய 10 பந்துகளில் 5 விக்கெட்டுகள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.

உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்!
உலக சாதனை படைத்த பின்லாந்து வீரர்!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 5 விக்கெட்டுகள்:

* 8 பந்துகள் - மகேஷ் தம்பே பின்லாந்து - Vs எஸ்டோனியா - 2025

* 10 பந்துகள் - ஜுனைட் அஜீஸ் - பஹ்ரைன் Vs ஜெர்மனி - 2022

* 11 பந்துகள் - ரஷித் கான் - ஆப்கானிஸ்தான் Vs அயர்லாந்து - 2017

* 11 பந்துகள் - மோசம் பெய்க் - மலாவி Vs கேமரூன் - 2024

* 11 பந்துகள் - கிசர் ஹயாத் - மலேசியா Vs ஹாங்காங் - 2020

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com