IND vs NZ 2வது டி20| நியூசிலாந்து அதிரடி.. இந்தியாவிற்கு 209 ரன்கள் இலக்கு!
ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக விளையாடினர். இந்திய அணியில் பும்ரா மற்றும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்சித் ராணா இடம் பெற்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் 238 ரன்கள் குவித்த இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடந்துவருகிறது.
188 ரன்கள் குவித்த நியூசிலாந்து..
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 208 ரன்கள் சேர்த்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 பந்தில் 47 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பும்ரா மற்றும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்சித் ராணாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

