india vs new zealand
india vs new zealandweb

IND vs NZ ஃபைனல்| நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு.. அதே அணியுடன் களமிறங்கும் இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on
Summary

அகமதாபாத்தில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியா அதே அணியுடன் களமிறங்குகிறது. 2023ஆம் ஆண்டில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா, இம்முறை வெற்றியை நோக்கி பயணிக்கிறது. நியூசிலாந்து அணியின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஆனால் ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்துவருவதால் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

india - new zealand
india - new zealandweb

இதுவரை நியூசிலாந்து 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள நிலையில், ஐசிசி நாக்அவுட் டிராபி 2000, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டிலுமே இந்திய அணியை தான் இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பை வென்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வி மற்றும் சொந்தமண்ணில் 0-3 என டெஸ்ட்டில் ஒயிட்வாஷ் என பல மறக்கமுடியாத தோல்விகளை நியூசிலாந்து கொடுத்திருக்கும் நிலையில், இந்தியா அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

india vs new zealand
’இந்தியாவிற்கு தோல்வி பயம்..’ ஃபைனலுக்கு முன் செய்த மூடநம்பிக்கைகள்..? எழுந்த விமர்சனம்!

இந்திய அணி பேட்டிங்..

பரபரப்பாக தொடங்கியிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். நியூசிலாந்து அணியில் ஸ்பின்னர் கோல் மெக்கோன்சி நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரையில் அரையிறுதிப்போட்டியில் விளையாடிய அதே அணியுடன் சென்றுள்ளது இந்திய அணி. குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் அணிக்குள் எடுத்துவரப்பட்டு, அபிஷேக் சர்மா வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றமில்லாமல் சென்றுள்ளது இந்தியா.

இந்தியா (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்(கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

india vs new zealand
FINAL| இந்த நியூசிலாந்து வீரரால் ஆபத்து.. 14வது நிமிடத்தில் அனைத்தும் மாறும்.. கணித்த ஜோதிடர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com