nz vs pak
nz vs pakcricinfo

சாம்பியன்ஸ் டிராபி | பிரச்னைகள் தெரிந்தும் திருந்தாத பாகிஸ்தான்.. நியூசிலாந்து அபார வெற்றி!

2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.
Published on

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டி 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் மூன்று பேரும் 10, 1, 10 என சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய வில் யங், 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்து சதமடித்து அசத்தினார். வில் யங் 107 ரன்கள் அடித்து அசத்த, ’களத்துல நானும் இருக்கேன்’-பா என 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய டாம் லாதம் 118 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வில் யங்
வில் யங்

இறுதியாக வந்து காட்டடி அடித்த க்ளென் பிலிப்ஸ் 39 பந்தில் 61 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 320 ரன்களை குவித்தது நியூசிலாந்து.

nz vs pak
27 வருட வரலாற்றில் புதிய மைல்கல்.. ஒரே போட்டியில் சதமடித்த 2 நியூசி. வீரர்கள்! 320 ரன்கள் குவிப்பு!

260 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து..

321 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ஐசிசி ரூல்ஸ் காரணமாக ஃபகார் ஜமான் தொடக்க வீரராக களமிறங்க முடியாமல் போனது. அவருக்கு முன்னதாக களத்திற்கு வந்த ஷாத் ஷக்கீல், முகமது ரிஸ்வான் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். பிரைம் ஃபார்மில் இருக்கும் ரிஸ்வானை ஒரு அசாத்தியமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் க்ளென் பிலிப்ஸ்.

3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபகார் ஜமான் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டினாலும், நீண்டநேரம் நிலைத்துநிற்காமல் 24 ரன்னில் வெளியேறினார்.

69 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறிய நிலையில், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட சல்மான் ஆஹா மற்றும் பாபர் அசாம் இருவரும் நம்பிக்கை அளித்தனர். ஆனால் சல்மான் 42 ரன்னில் வெளியேற, அரைசதமடித்து நிலைத்து நின்ற பாபர் அசாம் 64 ரன்னில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய குஷ்தில் ஷா 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி நியூசிலாந்தை அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அவரும் 69 ரன்னில் வெளியேற, 260 ரன்னில் பாகிஸ்தானை சுருட்டிய நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.

nz vs pak
சாம்பியன்ஸ் டிராபி | கராச்சியில் ஏற்றப்பட்ட இந்தியக் கொடி.. புகழும் கிரிக்கெட் ரசிகர்கள்!

பிரச்னைகள் தெரிந்தும் திருந்தாத பாகிஸ்தான்..

முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு நன்றாகவே பந்து திரும்பியது, இதனால் வேகப்பந்துவீச்சை விட அதிகமாக ஸ்பின்னர்களை பயன்படுத்திய மிட்செல் சாண்ட்னர், பாகிஸ்தானை மொத்தமாக டாமினேட் செய்தார். இதைப்பார்த்த போது எதற்கு பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது என்பதே புரியாமல் போனது.

எந்தளவு பந்து திரும்பியது என்றால் பாகிஸ்தான் ஸ்பின்னர்களை விட நியூசிலாந்து ஸ்பின்னர்களுக்கு 2 மடங்கு அதிகமாக திரும்பியது.

அப்ரார் அகமது
அப்ரார் அகமது

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாகவே, மிடில் ஓவர்களில் சிறப்பாக வீச பாகிஸ்தானிடம் ஸ்பின்னர்கள் இல்லை என்பது கேள்வியாக வைக்கப்பட்டது. ஒரே ஒரு ஸ்பின்னராக அப்ரார் அகமது மட்டுமே சிறந்து விளங்கினார். அவரை தவிர இரண்டு பார்ட் டைம் ஸ்பின்னர்கள் இருந்தும், அவர்களை கொண்டு பாகிஸ்தானால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இந்த பிரச்னை குறித்து தொடருக்கு முன்னதாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான், இருக்கும் ஸ்பின்னர்களை வைத்து தங்களால் சிறப்பாக செல்லமுடியம் என்று கூறினார். ஆனால் பிரச்னைகள் இருப்பது தெரிந்தும் அதை சரிசெய்யாமல் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான்.

பிரேஸ்வெல்
பிரேஸ்வெல்

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 2 நியூசிலாந்து வீரர்கள் சதமடித்து இன்றைய போட்டியில் சாதனை படைத்தனர். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

nz vs pak
அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், டோட்டல்.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் 28 சாதனைகள்! முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com