murali - warne
murali - warneweb

முரளிதரன் Or வார்னே? யார் சிறந்தவர்? பல்லாண்டு விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்த லாரா!

இரண்டு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே இருவர்களில் யார் சிறந்த பந்துவீச்சாளர்? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு பிரையன் லாரா பதிலளித்துள்ளார்.
Published on

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ’முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே’ என்ற இருவர் மட்டும் தான் 1000 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களாக உச்சம் தொட்டுள்ளனர். கிரிக்கெட்டின் ஒவ்வொரு தகவமைப்பின்போதும் உலகத்தின் நம்பர் 1 பேட்ஸ்மேன்களாக கருதப்பட்ட ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்த பெருமை இவ்விருவர்களுக்கே சேரும்.

முரளிதரன்
முரளிதரன்

இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கும் ஒரே பவுலரான முரளிதரன் சிறந்த பவுலரா, வேகப்பந்துவீச்சை முன்னிலைபடுத்தும் ஒரு நாட்டிலிருந்து வந்து 708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே சிறந்த பவுலரா என்ற விவாதம் பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வருகிறது.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

இரண்டு தலைசிறந்த ஜாம்பவான்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும், அது மிகவும் சவாலான விசயமும் கூட. ஆனால் இரண்டு பேருக்கு எதிராகவும் ரன்களை அடித்திருக்கும் பிரையன் லாரா இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

murali - warne
'63 எக்ஸ்ட்ரா ரன்கள் to பண்ட் RunOut' | லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவின் தோல்விக்கான 5 காரணங்கள்!

He is the Best.. லாராவின் தேர்வு இவர் தான்?

கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் குறித்த நீடித்த விவாதத்திற்கு பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா ஒரு தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளார். இரு ஐகான்கள் குறித்தும் நுணுக்கமாக விவரித்த லாரா, முரளிதரன் தன்னை வார்னேவை விட திணறடித்ததாக தெரிவித்தார். ஆனால் இருவரில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என்ற கேள்விக்கு, ஷேன் வார்னேவின் பெயரையே தேர்ந்தெடுத்தார்.

தி ஓவர்லேப் கிரிக்கெட் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேவுக்கு எதிராக எதிர்கொண்ட மாறுபட்ட சவால்களை லாரா விவரித்தார். அப்போது ஷேன் வார்னே முரளியை விட சிறந்தவர் என்று முத்திரை குத்தினார், அதே நேரத்தில் அவர்கள் அவருக்கு அளித்த பிரச்சனைகளையும் குறிப்பிட்டார். 

இருவர் குறித்தும் பேசிய லாரா, “நான் முரளிக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது என்ன பந்துவீசுகிறார் என்றே தெரியாமல் குழப்பமடைவேன். 3 போட்டிகளில் 688 ரன்கள் அடித்தபோதும் எனக்கு முரளி என்ன வீசுகிறார் என்பது தெரியாது. முதல் அரைமணிநேரத்திற்கு என்னால் எதையும் கணிக்க முடியாது, அதற்காக நான் ஸ்வீப் ஷாட்களை அவருக்கு எதிராக பயன்படுத்தினேன். ஷேன் வார்னேவை விட முரளி தான் எனக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தார்.

ஆனால் வார்னேவுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது, ஒவ்வொரு ஓவரிலும் பந்து பிட்ச்சின் நடுவில் இருந்துவரும். அது பிற்பகல் 2 அல்லது 3 மணியானாலும் சரி, அவர் அங்கிருந்து மாயாஜால பந்தை வீசுவார். அதனால்தான் நான் அவரை அதிகமாக மதிப்பிடுகிறேன், ஏனென்றால் அவர் மனதளவில் வலிமையானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவரது பந்துவீச்சு தாக்குதல் மற்றும் அவர் வீசிய பிட்சுகள், வேகப்பந்துவீச்சாளர்களான மெக்ராத் மற்றும் மெக்டெர்மாட்ஸுக்கு சாதகமாக இருந்தன. அங்கிருந்து அவர் அவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும், மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று லாரா மேலும் கூறினார்.

murali - warne
'தோல்விக்கு Pant-ஐ குற்றஞ்சாட்டிய கில்..' சாடிய ரவி சாஸ்திரி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com