தனியாளாக தமிழ்நாடை வீழ்த்திய ஷர்துல்! 48வது முறையாக பைனலுக்கு சென்ற மும்பை! தமிழ்நாடு தோல்வி!

2024 ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி 48வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது மும்பை அணி.
tamil nadu - mumbai
tamil nadu - mumbaiX

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளிம் முடிவை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம்” முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

7 ஆண்டுகளாக அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணி, சாய் கிஷோர் தலைமையில் புதிய உச்சத்தை எட்டியது. அதேநேரத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையே வெல்லாத மும்பை அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் முனைப்பில் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது.

tamilnadu team
tamilnadu team

முதல் அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

tamil nadu - mumbai
"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

தனியாளாக தமிழ்நாடை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர்!

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்டிங்கை தேர்வுசெய்து சொதப்பினார். தரமான ஸ்பின்னர்கள் நிரம்பிய தமிழ்நாடு அணியை, வேகப்பந்துவீச்சு மூலம் சிதைத்துள்ளது மும்பை அணி.

தமிழ்நாடு - மும்பை
தமிழ்நாடு - மும்பைBCCI

முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, ஷர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் அபாரமான பவுலிங்கால் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதற்கு பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பேட்டிங் செய்யவந்த ஷர்துல் தாக்கூர் அந்த இடத்திலிருந்து மும்பை அணியை மீட்டு சதமடித்து அசத்தினார். அவரின் சதம் மற்றும் கோட்டியான் அரைசதத்தின் உதவியால் 378 ரன்கள் குவித்தது.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர்

இக்கட்டான சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தமிழ்நாடு அணியை, மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர் தொடக்கவீரர்கள் சாய் சுதர்சனை 5 ரன்னிலும், ஜகதீசனை 0 ரன்னிலும் வெளியேற்றி சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். பின்னர் வந்த பேட்டர்களில் பாபா இந்திரஜித் சிறப்பாக பேட்டிங் செய்து 70 ரன்கள் அடித்தாலும், மற்றவீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர்

162 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் 109 ரன்கள், பவுலிங்கில் முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

tamil nadu - mumbai
மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!

48வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை!

ரஞ்சிக்கோப்பையை பொறுத்தவரையில் ரஞ்சி கிங் அணி என்றால் அது மும்பை அணி தான், 41 முறை கோப்பை வென்று வரலாறு படைத்திருக்கும் அந்த அணி 15 முறை தொடர்ச்சியாக கோப்பைகளை வென்ற ஒரேஅணி என்ற பெருமையையும் கொண்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கடைசியாக கோப்பை வென்ற அந்த அணி 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்பில் களம்கண்டுள்ளது.

மும்பை அணி
மும்பை அணி

கடந்த 2022ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த மும்பை அணி மத்திய பிரதேசத்திடம் தோற்று கோப்பையை நழுவவிட்ட நிலையில், தற்போது 48வது முறையாக இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. அஜிங்கியா ரஹானே தலைமையில், ”பிரித் வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான், ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே” முதலிய ஸ்டார் வீரர்களை கொண்டு களம்புகுந்துள்ள மும்பை அணி இந்தமுறை கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்துவருகிறது.

தமிழ்நாடு அணி
தமிழ்நாடு அணி

அதேவேளையில் 1934ம் ஆண்டு தொடங்கி 90 ஆண்டுகளை கடந்து நடந்துகொண்டிருக்கும் ரஞ்சிக்கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 1955 மற்றும் 1988 ஆண்டுகள் என இரண்டு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. மொத்தமாக 11 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் தமிழ்நாடு 2 முறை வெற்றியும், 9 முறை தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 36 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத வடுக்களை சுமந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு அணி, மீண்டும் ஒருமுறை தோல்வி முகத்தோடு திரும்பியுள்ளது.

tamil nadu - mumbai
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com