“நீ வரல அதனால நானும் வரல” முட்டிக்கொண்ட ஜெய்ஸ்வால் - சர்ஃபராஸ்! முடிவில் Sarfaraz செய்த GREAT செயல்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரன்கள் ஓடுவதில் இளம்வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் கமெண்டரியில் சிரிப்பலை ஏற்பட்டது.
sarfaraz - jaiswal
sarfaraz - jaiswalX

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ் கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 430 ரன்கள் அடித்து 557 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதுகுப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பாதியிலேயே வெளியேறினார். அதற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 91 ரன்களடித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார். 5வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் களமிறங்க, சர்பராஸ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Jaiswal
Jaiswal

ஜெய்ஸ்வால்-சர்ஃபராஸ் கான் இரண்டு வீரர்களும் இரண்டு பக்கமும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்ட, இந்திய அணிக்கு ரன்கள் மலைபோல் குவிந்தன. சதமடித்த பிறகு ஆண்டர்சன் ஓவரில் ஹாட்ரிக் சிக்சரையெல்லாம் பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் 14 பவுண்டரிகள் 12 சிக்சர்களை விளாசி தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை பதிவுசெய்து சாதனை படைத்தார். மறுமுனையில் தன்னுடைய அறிமுக போட்டியிலே முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்திருந்த சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்து ஒரு பிரத்யேக சாதனை பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார். முடிவில் 430/4 என்ற நிலையில் இந்தியா டிக்ளார் செய்தது.

sarfaraz - jaiswal
sarfaraz - jaiswal

இதற்கிடையில் ஜெய்ஸ்வால்-சர்ஃபராஸ் கான் இரண்டு வீரர்களும் 198 மற்றும் 48 ரன்களில் இருந்த நிலையில், விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் ஓடுவதில் முட்டிக்கொண்டனர். களத்தில் இவர்கள் செய்த “சின்ன பசங்க சண்டை” பார்ப்போரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

sarfaraz - jaiswal
’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

நான் கூப்பிடும்போது நீ வரல.. இப்போ நீ கூப்டா நான் வரனுமா!

சர்பராஸ் கான் 47 ரன்களில் இருந்த போது ரெஹான் அகமது வீசிய பந்தில் கவர் சைடில் தட்டிவிட்டு 2 ரன்களுக்கு ஜெய்ஸ்வாலை அழைப்பார். அந்த இடத்தில் இரண்டு ரன்கள் எளிதாக எடுத்திவிடும் நிலையே இருந்தது. இருப்பினும் சர்ஃபராஸ் கானின் அழைப்பை மறுத்து ஜெய்ஸ்வால் நோ சொல்லி இரண்டாவது ரன்னுக்கு வராமல் இருந்துவிடுவார். ஆனால் “எளிதாக இரண்டு ரன்கள் ஓடியிருக்கலாமே” என கோவமடைந்த சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வாலிடம் வாக்குவாதம் செய்வார். பதிலுக்கு அவரும் பேச இருவரும் இரண்டு ஓவர்கள் தாண்டியும் பேசிக்கொண்டே இருந்தனர்.

sarfaraz - jaiswal
sarfaraz - jaiswal

அடுத்த ஓவரில் 197 ரன்களில் இருந்த ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களுக்கு அழைக்க, அதை ஏற்றுக்கொள்ளாமல் சர்ஃபராஸ் கான் பொறுமையாக ஓடி மறுத்துவிடுவார். இவர்கள் இருவரும் களத்தில் செய்த செயலை பார்த்து கமெண்டரியில் இருந்த வர்ணனையாளர்கள் முதற்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு இடையில் கேப்டன் ரோகித் சர்மாவும் ரியாக்சன் கொடுக்க போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்ளுக்கும் “என்ன பா சின்ன பசங்க மாதிரி சண்ட போட்டுக்கிறிங்க” என்று தோன்றுமளவு சிரிப்பலை ஏற்பட்டது.

sarfaraz - jaiswal
’யார் சாமி நீ’! உலகத்தில் ஒரேயொரு பேட்ஸ்மேனாக பேர்ஸ்டோ படைத்த மோசமான சாதனை!

“இது உனக்கான நாள் நீ முதலில் போ”! - சர்ஃபராஸ் கான் செய்த GREAT செயல்!

ஜெய்ஸ்வால் 200 அடிக்க, சர்பராஸ் கான் 50 ரன்கள் அடிக்க அதற்குபிறகு இரண்டு வீரர்களும் இங்கிலாந்து பவுலர்களை சிக்சர்களாக பறக்கவிட்டு அடிக்குமேல் அடிகொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா அழைக்க இரண்டு இளம் வீரர்களும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டு சென்றனர்.

sarfaraz - jaiswal
sarfaraz - jaiswal

அப்போது ஜெய்ஸ்வால் வா சேர்ந்து செல்லலாம் என சர்ஃபராஸ்கானை அழைக்க, அப்போது “நீ முதலில் போ, இது உன்னுடைய நாள், நீ தான் இரட்டை சதம் அடித்திருக்கிறாய்” என முதலில் போக சொன்ன செயல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் தான் முறைத்துக்கொண்டாலும் இரண்டு வீரர்களுக்கும் இடையே இருந்த ஸ்போர்ட்ஸ்மேஷிப் பார்ப்போரை நெகிழவைத்தது.

sarfaraz - jaiswal
7 டெஸ்ட்டில் ”2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரைசதம்”! சேவாக்கின் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com