\
mohit sharma joins likely to csk as bowling coach
Mohit SharmaANI

தொடர்ந்து மாற்றத்தைச் செய்யும் CSK.. ஜாகீரின் பரிந்துரையில் அடுத்த கோச் ரெடி!

மோகித், இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளிலும், 8 டி29 போட்டிகளிலும் விளையாடி முறையே 31 மற்றும் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Published on: 

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை அணிக்கு, பந்துவீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மா நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்த அப்டே வெளியாகி உள்ளது.

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை அணி, கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த ஜூலை மாதம் விலகினார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளது. இந்த நிலையில், அதே சென்னை அணியில், பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் மோகித் சர்மா இணையவுள்ளார். இந்தத் தகவலை சி எஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Mohit Sharma
Mohit SharmaANI

இதுகுறித்து அவர், "மோகித் எங்கள் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக சிஎஸ்கே அணியில் இணைவார். எங்கள் தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் அவரது பெயரைப் பரிந்துரைத்தார். மோஹித் ஒரு வீரராகவும் எங்களுடன் சிறப்பாகச் செயல்பட்டார், மேலும் அவர் பந்துவிச்சுப் பயிற்சியாளராகவும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஜாகீர் கான் பரிந்துரையின்பேரில், வரும் வாரங்களில் அடுத்தட்ட பயிற்சி ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

mohit sharma joins likely to csk as bowling coach
CSK-வைத் தொடர்ந்து பயிற்சியாளரை மாற்றிய மும்பை அணி.. யார் இந்த லூக் வில்லியம்ஸ்?

ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடைசியாக விளையாடி மோகித், ஆனால் அதற்கு முன்பு சிஎஸ்கே அணியுடன் நான்கு சீசன்களுக்கு இரண்டு முறை பணியாற்றியுள்ளார். அவர், தற்போது பந்துவீச்சுப் பயிற்சியாளராக எரிக் சிம்மன்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 38 வயதான மோகித், ஐபிஎல் தொடரில் 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிலும் அவர் விளையாடி உள்ளார். மோகித், இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளிலும், 8 டி29 போட்டிகளிலும் விளையாடி முறையே 31 மற்றும் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

mohit sharma joins likely to csk as bowling coach
CSK-வின் தலைமை பயிற்சியாளராக `ஜாகீர் கான்’.. வெளியான அறிவிப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com