\
Zaheer Khan Named CSK Head Coach for IPL 2027
ஜாகீர் கான்Chat Gpt

CSK-வின் தலைமை பயிற்சியாளராக `ஜாகீர் கான்’.. வெளியான அறிவிப்பு!!

2027 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் விலகினார் ஸ்டீபன் பிளெமிங். இரு தரப்புக்கும் இடையே நடந்த சுமுகமான மற்றும் நேர்மையான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.

தோனி - பிளெமிங்
தோனி - பிளெமிங்PTI

இந்தச்சூழலில் தான், புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை தலைமைப் பயிற்சியாளராக்க அணி நிர்வாகம் விரும்பிய நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவை இந்தியர்களை மையமாகக் கொண்டு அமைக்க வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்தச்சூழலில் தான், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Zaheer Khan Named CSK Head Coach for IPL 2027
6 மாதத்தில் முடிவுக்கு வந்த நிச்சயதார்த்தம்.. 2 இன்னிங்ஸிலும் சறுக்கலைச் சந்தித்த பிரித்வி ஷா!

இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய ஜாகீர் கான், 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் வேகப்பந்து ஆலோசகர், பின்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் தொடர்பாக சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் பேசுகையில், ஜாகீர் கானின் சிறப்பான விளையாட்டு அனுபவம் மற்றும் இளம் வீரர்களை வளர்க்கும் திறன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும் அவரது வழிகாட்டுதல் அணியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன், ஜாகீர் கான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பல ஆண்டுகளாக சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார் எனவும் அவரை வரவேற்பதில் ஆவலாக உள்ளோம் எனவும் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, இந்த நியமனம் குறித்துப் பேசியுள்ள ஜாகீர்கான், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணியில் இணைவது பெருமையாக உள்ளது. ஒரு வீரராக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளை நான் வெகுவாக ரசித்தேன். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கும் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், வரும் ஐபிஎல் தொடரிலாவது சிஎஸ்கே Come back கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Zaheer Khan Named CSK Head Coach for IPL 2027
பும்ரா மீது வெறுப்பு; CSK வீரருக்கு ஆதரவு.. பிசிசிஐயிடம் மோதிய அகர்கர்.. வெளியான புதிய தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com