\
shami
shamireuters

”இந்திய அணிக்கு ஷமி தேவை..” தேர்வுக்குழுவை எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்!

இந்திய ஒருநாள் அணியில் ஷமி இடம்பெற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on: 
Summary

இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளதால், முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், முகமது ஷமியை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். உலகக்கோப்பைக்கு முன்னதாக, பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தங்களின் பந்துவீச்சை மேம்படுத்தும் நோக்கில் பல முயற்சிகளை செய்துவருகிறது. ஒருபக்கம் பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், கேஎல் ராகுல் என டாப் 6 வரை இந்திய அணியின் பேட்டிங் கோலோச்சும் வகையில் உள்ளது. ஆனால் மறுபக்கம் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், நிதிஷ்குமார் ரெட்டி என பலவீனமாக உள்ளது. அனுபவமற்ற பவுலர்கள் என்பதால் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சுமாராக செயல்பட்டு வருகின்றனர்.

சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி
சுப்மன் கில் தலைமையில் இந்திய அணிDavid Woodley

இந்தசூழலில் தான் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி இருவரும் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்ற குரல் பெரிதாக எழுந்தது. இதற்கிடையில் புவனேஷ்வர் குமார் இந்திய டி20 அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமி இடம்பிடிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் எச்சரித்துள்ளார்.

shami
அஜித் அகர்கர் விலகிய அடுத்த நொடி.. அதிரடி பதிவு போட்ட ரவீந்திர ஜடேஜா.. பின்னணி என்ன?

சமீபமாக இளம் பவுலர்கள் சிறப்பாகச் செயல்படத் தவறியதைக் கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜாஃபர் நம்புகிறார். ஜஸ்பிரித் பும்ரா முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களை அணி இன்னும் இறுதி செய்யவில்லை என ஜாஃபர் கருதுகிறார்.

shami
shamipti

இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், "ஒருநாள் அணியின் பந்துவீச்சு பற்றி எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி போன்ற பல வீரர்களை நாம் முயற்சித்தோம், ஆனால் அவர்களின் பர்ஃபார்மன்ஸ் நிர்வாகத்திற்கு இன்னும் நம்பிக்கை கொடுக்கவில்லை. சிராஜுக்கும் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை வழங்குவதில்லை.

இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்று எனக்குப் புரியவில்லை. ஹர்திக் பாண்டியாவும் தயாராக இல்லை. உலகக் கோப்பையும் மிக அருகில் இருப்பதால், என்னைப் பொறுத்தவரை ஷமி ஒருநாள் அணியில் இருக்க வேண்டும். அவரைப்போல குவாலிட்டி பவுலர் உங்களிடம் இருக்கும்போது, நீங்கள் அவரை விளையாட வைக்க வேண்டும். எனது முதல் தேர்வாக பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆக உலகக்கோப்பையில் இருப்பார்கள், அதன் பிறகு அணியை மறுசீரமைப்பது பற்றி சிந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.

shami
“இந்திய அணியின் பவுலிங் கிங்காக..” புவனேஷ்வர் குமாரை புகழ்ந்த அஸ்வின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com