2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணிweb

2026 டி20 உலகக்கோப்பையின் சிறந்த XI.. 3 இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்!

2026 டி20 உலகக்கோப்பையின் சிறந்த 11 பேர் கொண்ட அணியை பட்டியலிட்டுள்ளனர் முன்னாள் வீரர்கள்..
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி 255 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வீழ்த்தி 3 முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது. மைக்கேல் வாகன் மற்றும் அஜிங்கியா ரஹானே சிறந்த XI-ஐ தேர்வு செய்துள்ளனர்.

2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலகசாதனைகளை படைத்து அசத்தியது.

இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஒட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா என தொடர் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஓவ்வொரு மேட்ச் வின்னர்கள் உருவாகினர். அதன் பயனே இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால், இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிweb

இந்தசூழலில் 2026 டி20 உலகக்கோப்பையின் சிறந்த அணியை முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் அஜிங்கியா ரஹானே தேர்வுசெய்துள்ளனர்.

2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி
2023-ல் ரத்தக் கண்ணீர்.. 2026-ல் ஆனந்த கண்ணீர்.. சரித்திரத்தை மாற்றிஎழுதிய இந்தியா!

மைக்கேல் வாகனின் சிறந்த 11..

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனின் அணியில், தொடக்க வீரர்களாக தொடர் நாயகன் சஞ்சு சாம்சனும், அரையிறுதியில் அதிவேக சதமடித்த ஃபின் ஆலனும் இடம்பிடித்துள்ளனர். நம்பர் 3 ஷிம்ரன் ஹெட்மயர், நம்பர் 4 ஜேக்கப் பெத்தலும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஹர்திக் பாண்டியாவும், ஃபினிசிங் ரோலில் வில் ஜாக்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட்டும் உள்ளனர். பந்துவீச்சாளர்களாக மிட்செல் சாண்டனர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மேட் ஹென்றி இடம்பிடித்துள்ளனர்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

மைக்கேல் வாகனின் சிறந்த டி20 உலகக்கோப்பை 2026 அணியில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா என 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

2026 டி20 உலகக் கோப்பை சிறந்த 11:

சஞ்சு சாம்சன், ஃபின் ஆலன், ஷிம்ரன் ஹெட்மியர், ஜேக்கப் பெத்தெல், டெவால்ட் பிரெவிஸ், ஹார்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், மிட்செல் சாண்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, மேட் ஹென்றி

2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி
மீண்டும் சாம்பியன்.. பொறாமையில் இந்தியாவை கேலி செய்த சோயிப் அக்தர்!

அஜிங்கியா ரஹானேவின் சிறந்த 11..

இந்திய முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானேவின் சிறந்த அணியில், தொடக்க வீரர்களாக வாகன் தேர்வுசெய்த சஞ்சு சாம்சன், ஃபின் ஆலன் இடம்பிடித்துள்ளனர். ஆனால் 3வது, 4வது வரிசையில் இந்தியாவின் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவை தேர்வுசெய்துள்ளார். சூர்யா அணியின் கேப்டனாகவும் பிக் செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரேவிஸ், ஹர்திக் பாண்டியா இடம்பித்துள்ளனர். ஃபினிசிங் ரோலில் வில் ஜாக்ஸ் உடன் இந்தியாவின் அக்சர் பட்டேல் இடம்பித்துள்ளார். பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் மேட் ஹென்றி உடன் இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரசீத் இணைந்துள்ளார்.

பும்ரா
பும்ராweb

ரஹானேவின் அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் மற்றும் பும்ரா என 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ரஹானேவின் சிறந்த 11:

சஞ்சு சாம்சன், ஃபின் ஆலன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், அக்சர் படேல், அடில் ரஷித், ஜஸ்பிரித் பும்ரா, மேட் ஹென்றி

2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணி
”நம்பிக்கையில்லை; அணியிலிருந்து நீக்கிடுங்க..” கோச், கேப்டனிடம் கெஞ்சிய அபிஷேக் சர்மா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com