2023-ல் விட்ட கண்ணீரை 2026-ல் ஆனந்த கண்ணீராக மாற்றிய இந்தியா
2023-ல் விட்ட கண்ணீரை 2026-ல் ஆனந்த கண்ணீராக மாற்றிய இந்தியாweb

2023-ல் ரத்தக் கண்ணீர்.. 2026-ல் ஆனந்த கண்ணீர்.. சரித்திரத்தை மாற்றிஎழுதிய இந்தியா!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எந்த மைதானத்தில் தோற்று கண்ணீர்விட்டோமோ, எந்த மைதானத்தில் ரசிகர்கள் சைலண்ட் ஆனார்களோ, அதே இடத்தில் புதிய சரித்திரம் படைத்துள்ளது இந்திய அணி.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி 255 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது. 2023-ல் கண்ணீருடன் மைதானத்தை விட்டு சென்ற இந்திய ரசிகர்கள், இப்போது மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளனர். இந்தியா 3 டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் வெற்றி பெற்ற முதல் அணி என 3 உலகசாதனைகளை படைத்துள்ளது.

’மைதானத்தில் குழுமியிருக்கும் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களை சைலண்ட் செய்வதுதான் இலக்கு’ என்று கூறிய ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ், சொன்னதை போலவே 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று அகமதாபாத் மைதானத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு இந்திய ரசிகனின் நெஞ்சையும் உடைத்தார்.

தோல்விக்கு பிறகு மொத்த இந்திய ரசிகர்களும் கண்ணீர் சிந்த, கைக்கு கிட்டிவிடாதா என ஏங்கியிருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கண்கலங்கியபடி போஸ்ட் மேட்ச் பிரசண்டேசனில் கூட கலந்துகொள்ளாமல் எங்கேயோ சென்று மறைந்தார்.

அந்ததோல்வியிலிருந்து இந்திய வீரர்களால் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்திய ரசிகனாலும் வெளியில் வரமுடியாத சூழலே இருந்தது. 2019 உலகக்கோப்பையில் எலேய் கப்டில் என் வயிறு எரியுதுலே என்று குமுறியதை விட, 2023 உலகக்கோப்பையில் எலேய் டிராவிஸ் ஹெட் எங்க வயிறு எரியுதுலே என குமுறியது தான் அதிகம். சொந்தமண்ணில் ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்பதெல்லாம் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கும் நடக்கக்கூடாதா ஒன்று. அதிலும் உலகக்கோப்பை கிடைக்காதா என ஏங்கிகொண்டிருந்த ரசிகர்களுக்கு, கோப்பை வென்று அதன்மேல் கால்வைத்து போஸ் கொடுத்ததெல்லாம், இந்தியாவின் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஆராத வடுவாக மாறியது.

இப்படி பட்ட வலியை அகமதாபாத் மைதானத்தில் கண்ட இந்திய ரசிகர்களுக்கு தற்போது இந்திய அணி அளவில்லா மகிழ்ச்சியை பரிசளித்துள்ளது.

2023-ல் விட்ட கண்ணீரை 2026-ல் ஆனந்த கண்ணீராக மாற்றிய இந்தியா
இந்தியா வெல்ல ‘பிட்ச் டேம்பரிங்’ செய்த BCCI..? நாசர் ஹுசைன் பேசியதாக வீடியோ வைரல்! உண்மை என்ன?

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, பாட் கம்மின்ஸ் சொன்ன அதே வார்த்தையை மீண்டும் உச்சரித்தார் நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர். போட்டிக்கு முன்னதாக பேசிய அவர், ஒரு முறை கோப்பையை வெல்வதற்காகச் சிலரின் இதயங்களை உடைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உள்ளூர் ரசிகர்களை சைலன்ஸ் ஆக்குவதே எங்கள் இலக்கு என கூறியிருந்தார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஒருமுறை கூட நியூசிலாந்தை வெல்லாத இந்தியா, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்காத நியூசிலாந்து என அனைத்துமே இந்தியாவிற்கு எதிராகவே இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் 255 ரன்களை குவித்த இந்தியா ஒரு வரலாற்று டோட்டலை பதிவுசெய்து, நியூசிலாந்தை தோற்கடித்து கண்ணீர்விட்ட அதே அகமதாபாத் மைதானத்தில் புதிய சரித்திரம் படைத்தது.

2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 3 டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் உலகக்கோப்பை வெல்லும் முதல் அணி, தொடர்ந்து அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி என 3 உலகசாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. 2023-ல் கண்ணீருடன் மைதானத்திலிருந்து விடைபெற்ற இந்திய ரசிகர்கள், இன்று ஆனந்தத்தின் உச்சியில் விடைபெற்றுள்ளனர். வாழ்த்துக்கள் சாம்பியன் இந்தியா!

2023-ல் விட்ட கண்ணீரை 2026-ல் ஆனந்த கண்ணீராக மாற்றிய இந்தியா
’உலகக்கோப்பை’ வென்று 3 உலகசாதனை படைத்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com