Abhishek Sharma says with Coach Captain to Remove Him from Team
abhishek sharmax page

”நம்பிக்கையில்லை; அணியிலிருந்து நீக்கிடுங்க..” கோச், கேப்டனிடம் கெஞ்சிய அபிஷேக் சர்மா!

”டி20 உலகக்கோப்பை தொடரில், தன்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் கோரிக்கை வைத்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
Published on

டி20 உலகக்கோப்பை தொடரில், அபிஷேக் சர்மா மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதுடன், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆயினும், அவர் இறுதிப்போட்டி அணியிலும் இடம்பிடித்தார். அதன்படி, தம்மீது வைத்த நம்பிக்கையை அவர் வீண்போக்காது இறுதிப்போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து இந்தியாவின் ரன்குவிப்புக்கு வித்திட்டார். அவருடைய ரன் குவிப்பின் பங்களிப்பாலும் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.

ஒருவழியாக டி20 உலகக்கோப்பையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம்படை வென்று வாகை சூடியிருக்கிறது. வெற்றி குறித்து இந்திய அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீரர்களும் தங்களது நினைவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், டி 20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவிப்பார் என அனைவராலும் கணிக்கப்பட்ட அபிஷேக் சர்மா கடுமையான தடுமாற்றங்களை சந்தித்தார். குறிப்பாக இந்த தொடரில் அவர் தொடர்ந்து மூன்று முறை டக்அவுட் ஆனார். தவிர, சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார். பின்னர், தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்தார்.

Abhishek Sharma says with Coach Captain to Remove Him from Team
abhishek sharmax page

இதனால் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதுடன், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆயினும், அவர் இறுதிப்போட்டி அணியிலும் இடம்பிடித்தார். அதன்படி, தம்மீது வைத்த நம்பிக்கையை அவர் வீண்போக்காது இறுதிப்போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து இந்தியாவின் ரன்குவிப்புக்கு வித்திட்டார். அவருடைய ரன் குவிப்பின் பங்களிப்பாலும் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.

Abhishek Sharma says with Coach Captain to Remove Him from Team
”அணி ஜெயிச்சதால தப்பிச்சார்; இல்லனா” - அபிஷேக் சர்மாவைச் சாடும் முன்னாள் ஜாம்பவான்கள்!

இந்த நிலையில், தனது கடந்தகாலம் குறித்துப் பேசியிருக்கும் அபிஷேக் சர்மா, “நான் ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்று என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நாள். என்னுடைய பயிற்சியாளரும் கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால், எனது திறமை குறித்து எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஓர் அனுபவம் எனக்கு முன்பு வந்ததே கிடையாது. இந்த தொடர் முழுவதும் எனக்கு கடும் நெருக்கடியாக இருந்தது. எனினும் என்னுடைய பயிற்சியை நான் விடவே இல்லை. ஒரு தருணத்திற்கு ஒரு போட்டி என்று கவனம் செலுத்தி விளையாடினேன். அப்போதும் எனக்கு எதுவுமே சுலபமாக அமையவில்லை. ஆனால் இந்த அணியை நான் அவ்வளவு நேசிக்கின்றேன்.

Abhishek Sharma says with Coach Captain to Remove Him from Team
abhishek sharmax page

ஒவ்வொரு வீரர்களும் என் பின்னால் நின்று ஆதரவு அளித்தார்கள். ஆனால் எனக்குத்தான் சுலபமாக இல்லை. கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிவிட்டு முக்கியமான கட்டத்தில் தடுமாறுகிறோமே என்ற உணர்வு இருந்தது. ஆனால் என்னுடைய அணி நிர்வாகம் என்னை ஒருபோதும் கைவிடவில்லை.ஒரு கட்டத்தில் தொடரின் நடுவே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் சென்று அணியை விட்டு நீக்கி விடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள். நீ எங்களுக்காக மிகப் பெரிய போட்டிகளை வென்று கொடுப்பாய். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள். இதேபோன்று ரசிகர்களும், என்னுடைய கடினமான இந்த காலகட்டத்தில் துணையாக நின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Abhishek Sharma says with Coach Captain to Remove Him from Team
”4 பந்தை Waste பண்ணுங்க..” அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரை சொன்ன கவாஸ்கர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com