”சவால்தான்; RCB-ஐ வீழ்த்த இதை நாங்க நிச்சயம் செய்யணும்”- WPL ஃபைனல் குறித்து DC கேப்டன் மெக் லானிங்!

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் 2024 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.
மந்தனா - லானிங்
மந்தனா - லானிங்web

IPL மற்றும் WPL என இரண்டையும் எடுத்துக்கொண்டாலும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதேயில்லை. அந்த அடிப்படையில் இதுவரை கோப்பையே வெல்லாத ஒரு அணி, கோப்பையை வென்று தோல்வி முகத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடந்து முடிந்த 2 லீக் போட்டியிலும் 25 ரன்கள் மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்திய டெல்லி அணி, பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. அதேநேரத்தில் டெல்லி அணிக்கான இரண்டு போட்டியிலும் வெற்றியின் பக்கமிருந்து பின்னர் ஆர்சிபி அணி கோட்டைவிட்டுள்ளது.

meg lanning
meg lanning

முதல் லீக் போட்டியில் 195 ரன்களை துரத்திய ஆர்சிபி அணி 11 ஓவரில் 110 ரன்களை எடுத்து நல்ல நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது, அதேபோல இரண்டாவது போட்டியிலும் 1 ரன் வித்தியாசத்தில் போட்டியை கோட்டைவிட்டது.

RCB
RCB

பைனல் போட்டி நடக்கவிருக்கும் இதே அருன் ஜெட்லி மைதானத்தில் தான் 1 ரன்னில் தோல்வியுற்ற போட்டியும் நடைபெற்றது. இந்நிலையில் இறுதிப்போட்டியானது நிச்சயம் ஒரு சிதறடிக்கும் போட்டியாகவே அமையவிருக்கிறது.

மந்தனா - லானிங்
38 ஓவர்கள் வரை RCB போட்டியிலேயே இல்லை.. அந்த 12 பந்துகள் தான்..! தோல்வி குறித்து MI கோச் ஏமாற்றம்!

RCB-க்கு எதிராக சிறந்த கிரிக்கெட் ஆடவேண்டும்! - மெக் லானிங்

கடந்த 2023 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி மும்பை அணிக்கு எதிராக தோற்று ரன்னர் அணியாக தொடரை முடித்தது. 2023-க்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் டெல்லி அணி, இந்தமுறை கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் திடமாக இருக்கிறது.

பைனலில் ராயல் சேலஞ்சர்ஸை எதிர்கொள்ளவிருப்பது குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் மெக் லானிங், “இறுதிப்போட்டியில் அன்றைய நாளில் யார் தங்களை சரியான நேரத்தில் பொறுத்திக்கொள்கிறார்களோ, அவர்களுடைய கால்களை அழுத்தத்தில் திடமாக வைத்துக்கொள்கிறார்களோ அவர்களின் பக்கம் முடிவுசெல்லும். ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் அவர்களில் அழுத்தமான நேரத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதை லீக் போட்டியிலேயே நிரூபித்து காட்டியுள்ளார்கள். அவர்களை வீழ்த்த வேண்டுமென்றால் ஒரு சிதறடிக்கும் ஆட்டத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். நிச்சயம் ஆர்சிபியை வீழ்த்துவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்திருக்கும் லானிங், “நாங்கள் தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டையும், அதற்கான முடிவையும் பெற்றுள்ளோம். ஏற்கனவே இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. அதனால் ஆர்சிபியை எதிர்கொள்ளும் சவாலிற்கு தயாராகவே இருக்கிறோம்” என்று லானிங் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

மந்தனா - லானிங்
கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com