1 மெய்டன், 39 டாட் பால்கள், 3 விக்கெட்டுகள்... ஆட்ட நாயகன் முகமது நபியின் மிரட்டல் பெர்ஃபாமன்ஸ்

"நான் டாட் பால்களில் அதிக கவனம் செலுத்துவதால் என்னுடைய எகானமி ரேட்டை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. என்னுடைய ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துவதாலும், சரியான உணவுப் பழக்கம் கொண்டிருப்பதாலும் என்னால் இன்னும் சிறப்பாக செயல்படமுடிகிறது" - முகமது நபி
முகமது நபி
முகமது நபிTwitter

போட்டி 34: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

நெதர்லாந்து: 179 ஆல் அவுட், ஓவர்கள் - 46.3
ஆப்கானிஸ்தான்: 181/3, ஓவர்கள் - 31.3

ஆட்ட நாயகன்: முகமது நபி (9.3 - 1 - 28 - 3, எகானமி - 2.94)

ஒவ்வொரு பெரிய தொடர் தொடங்கும்போதும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது அந்த அணியின் ஸ்பின்னர்கள் மிகச் சிறந்த செயல்பாட்டின் மூலம் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதுதான். இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமது என நான்கு ஸ்பின்னர்கள், சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்கள் என எல்லாம் அவர்களுக்கு ஏற்றதாக இருந்தன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவர்களின் ஸ்பின் யூனிட் சுமாரான தாக்கம் ஏற்படுத்தவே செய்திருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கான தாக்கமாக அது இல்லை. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் முகமது நபியின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவு இல்லை.

முகமது நபி
NZvPAK | பெங்களூருவில் நியூசிலாந்து & பாகிஸ்தான் மோதல்..!

2023 உலகக் கோப்பை முகமது நபியின் பந்துவீச்சு

vs வங்கதேசம் - 0/18

vs இந்தியா - 0/32

vs இங்கிலாந்து - 2/16

vs நியூசிலாந்து - 0/41

vs பாகிஸ்தான் - 1/31

vs இலங்கை - 0/33

முதல் 6 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார் நபி. எதிர்பார்த்ததை விட அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததால் இது அந்த அளவுக்கு பிரச்சனை உண்டாக்கவில்லை. இருந்தாலும் நெதர்லாந்துக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் நபி.

மிகவும் சிறப்பாகப் பந்துவீசிய அவர் பாஸ் டி லீட், லோகன் வேன் பீக், பால் வேன் மீக்ரன் என மூன்று நெதர்லாந்து வீரர்களை வெளியேற்றினார். சொல்லப்போனால் அவை ஒன்றும் மாபெரும் விக்கெட்டுகள் கிடையாது.
முகமது நபி
வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்! "2025 Champions Trophy"-க்கு தகுதிபெற்று சாதனை! மோசமான England-ன் நிலை?

டி லீட் மட்டுமே டாப் 7ல் ஆடக்கூடியவர். அப்படியிருக்கும்போது நபியின் செயல்பாட்டை எப்படி மேன் ஆஃப் தி மேட்ச் பெர்ஃபாமன்ஸாக சொல்லிட முடியும்? சொல்ல முடியும். ஏனெனில், நபி வீசிய 57 பந்துகளில் போனது 3 விக்கெட்டுகள் மட்டுமல்ல. மொத்தம் 6 விக்கெட்டுகள் அவர் ஓவரில் விழுந்தன.

இந்தப் போட்டியின் பேசுபொருளாக இருந்தது நெதர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனது. மொத்தம் 4 நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆனார்கள். அதில் 3 பேர் நபியின் ஓவரில்தான் ரன் அவுட் ஆனார்கள்.

பரிசளிப்பு விழாவில் சொன்னதுபோல் டாட் பால்கள் வீசுவதையே மிகமுக்கிய திட்டமாகக் கொண்டிருந்தார் நபி. மிகவும் துல்லியமாக அவர் பந்துவீசி நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். ரன்ரேட் வெகுவாக குறைந்தது. அதை சீர் செய்ய ஸ்டிரைக் ரொடேட் செய்வது அவசியம் என்று அவர்கள் கருதினார்கள். அதனால் நபியின் ஓவர்களில் ரிஸ்க் எடுத்து ஓட முயற்சி செய்தார்கள். அதன் விளைவாகவே இந்தப் போட்டியில் அவ்வளவு ரன் அவுட்கள் ஆனது.

நபியின் தாக்கம் அவர் பெயரில் பதிவாகியிருக்கும் 3 விக்கெட்டுகளில் மட்டுமல்ல. அவரது தாக்கம் மொத்தம் 6 விக்கெட்டுகளில் இருந்தது. அதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

முகமது நபி
”3 மாதத்திற்கு முன்தான் தாயை இழந்தேன்..”- 4வது வெற்றிக்கு பிறகு எமோசனலாக பேசிய கேப்டன் ஷாஹிதி!

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"நான் என்னுடைய லைன் & லென்த் இரண்டிலும் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். அதிக டாட் பால்கள் வீசவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். நான் எப்போதுமே அதிக கவனம் செலுத்துவது என்னுடைய லைன், லென்த் மற்றும் வேரியேஷன்களில்தான். என்னுடைய திட்டத்தை சரியாக ஃபாலோ செய்கிறேன். ஆங்கிள்களை நன்கு பயன்படுத்துகிறேன். ஒருசில ஆடுகளங்களில், அதிக வேரியேஷன்கள் கிடைக்கும்.

அதனால்தான் சில சமயங்களில் எனக்கு அதிக விக்கெட்டுகள் கிடைக்கின்றன. நான் டாட் பால்களில் அதிக கவனம் செலுத்துவதால் என்னுடைய எகானமி ரேட்டை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. என்னுடைய ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துவதாலும், சரியான உணவுப் பழக்கம் கொண்டிருப்பதாலும் என்னால் இன்னும் சிறப்பாக செயல்படமுடிகிறது"

- முகமது நபி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com