\
ரிஷப் பண்ட் - பிரசித் கிருஷ்ணா
ரிஷப் பண்ட் - பிரசித் கிருஷ்ணாcricinfo

LSG vs GT| பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு.. 164 ரன்கள் அடித்த லக்னோ!

இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
Published on
Summary

லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 164 ரன்கள் அடித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரிஷப் பண்ட் - பிரசித் கிருஷ்ணா
Stubbs விக்கெட் திட்டமிட்ட சதியா.? Helmet-ஐ தூக்கி எறிந்து காட்டம்.. நடுவரிடம் நிதிஷ் வாக்குவாதம்.!

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில், எய்டன் மார்க்ரம் மட்டுமே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 30 ரன்கள் சேர்த்தார்.

மார்க்ரம்
மார்க்ரம்

அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் மிட்செல் மார்ஷ் 11, பண்ட் 18, பதோனி 9, பூரன் 19, சமாத் 18 மற்றும் முகுல் சௌத்ரி 18 என அனைவரும் சொதப்ப 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பிரசித் கிருஷ்ணா
பிரசித் கிருஷ்ணா

பந்துவீச்சை பொறுத்தவரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ரிஷப் பண்ட் - பிரசித் கிருஷ்ணா
சூர்யவன்ஷியின் சிக்ஸ் அடிக்கும் திறமையை விடுங்க.. ஒரு SINGLE-ஐ பார்த்து மிரண்ட ஜாம்பவான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com