cheeka - harshit rana - ashwin
cheeka - harshit rana - ashwinweb

'அஸ்வின் ஏன் இந்த கொலவெறி.. RCB பவுலர்களை நீங்க பேசுனீங்களே..?' - சீக்கா தரப்பில் பதிலடி

இந்திய ஒருநாள் அணியில் ஹர்சித் ராணா தேர்வுசெய்யப்பட்டதற்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சீக்கா விமர்சித்திருந்த நிலையில், அதற்கு கவுதம் கம்பீரை தொடர்ந்து அஸ்வினும் விமர்சித்திருந்தார்.
Published on
Summary

இந்திய ஒருநாள் அணியில் ஹர்சித் ராணா தேர்வுசெய்யப்பட்டதற்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சீக்கா விமர்சித்திருந்த நிலையில், அதற்கு கவுதம் கம்பீரை தொடர்ந்து அஸ்வினும் விமர்சித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 இரண்டுஅணியிலும் ஹர்சித் ராணா இடம்பெற்றது விமர்சனத்திற்குள்ளானது.

ஹர்சித் ரானா
ஹர்சித் ரானா

இந்நிலையில் ஹர்சித் ராணா அனைத்து வடிவ இந்திய அணியிலும் இடம்பெற்றதை முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் சஞ்சு சாம்சன், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் கேள்வி எழுப்பியிருந்தார்..

ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்
ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்web

சீக்காவின் விமர்சனம் குறித்து '23 வயதுவீரரை விமர்சித்தால் அவருடைய மனநிலை பாதிக்கப்படும்' என்று கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருந்த அஸ்வினும் கம்பீர் சொன்ன கருத்தையே சொல்லி சீக்கா தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

cheeka - harshit rana - ashwin
”என்கிட்ட மோதுங்க, 23 வயது வீரரை விமர்சிக்காதீங்க” - சீக்காவை சாடிய கம்பீர்

அஸ்வினுக்கு பதிலடி கொடுத்த சீக்கா..

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருந்த அஸ்வின், "எந்தவொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்று நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். தாக்குதல் மிகவும் தனிப்பட்டதாக மாறும்போது, ​​அது வேறுவிதமாக மாறுகிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். அவர் என் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை விமர்சித்துள்ளார். ஆனால் நான் அவர் மீது எந்த வெறுப்பும் கொண்டதில்லை. அவர்கள் சொல்வது சரி அல்லது தவறாக இருக்கலாம், விமர்சனம் தனிப்பட்டதாக இல்லாத வரை, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று பேசியிருந்தார்.

அஸ்வின் பேசியதற்கு சீக்காவும், அவருடைய மகன் அனிருதாவும் யூடியூப் சேனல் வீடியோவில் பதிலளித்துள்ளனர். அதில், உங்களை பற்றி நிறைய பேசுறாங்க சீக்கா? என்று அனிருதா கூற, அது கிடக்கும் விடுடா என்பது போல ரியாக்ட் செய்தார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

தொடர்ந்து அஸ்வின் கருத்து குறித்து பேசிய அனிருதா, "நான் கேட்க விரும்புவது, 'அஷ்வின் ப்ரோ ஏன் இந்த கொலவெறி.. நாங்க உங்களுக்கு என்ன செய்தோம்?. நீங்க பேசுனது கொஞ்சம் நியாயமற்றதாகத் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்பு, நீங்கள் முழு ஆர்சிபி பவுலர்களையும் கேலி செய்தீர்கள், அப்போது அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

cheeka - harshit rana - ashwin
கம்பீர் எழுதுற முதல் பெயரே ’ஹர்சித் ரானா’ தான் போல.. விமர்சித்த முன்னாள் இந்திய கேப்டன்!

மேலும், இது கொஞ்சம் பாசாங்குத்தனமாகத் தெரிகிறது. எப்படியிருந்தாலும், நீங்களும் நானும் அதைப்பற்றி அதிகம் பேச மாட்டோம். எல்லோருக்குமே அவர்களுக்கென ஒரு பார்வை, ஒரு தனிக்கருத்து உள்ளத்து. அதுதான் அழகும் கூட. சீக்கா பேசியதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து சீக்கா யாருக்கும் பயப்பட மாட்டார் என கூறிய அனிருதா, சீக்கா 1983-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சிகரெட் பற்றவைத்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறார். அன்றிலிருந்து அவர் யாருக்கும் பயப்பட்டதில்லை. சீகா மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பேசினார்.

cheeka - harshit rana - ashwin
"நம்மோட புள்ளைய இந்த மாதிரி.." ஹர்சித் ராணாவுக்கு எதிராக சீக்கா கருத்து.. அஸ்வின் ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com