கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்web

”என்கிட்ட மோதுங்க, 23 வயது வீரரை விமர்சிக்காதீங்க” - சீக்காவை சாடிய கம்பீர்

இந்திய அணியில் ஹர்சித் ராணாவின் தேர்வை விமர்சித்திருந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
Published on
Summary

இந்திய அணியில் ஹர்சித் ராணாவின் தேர்வை விமர்சித்திருந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

அக்டோபர் 19 முதல் நவம்பர் 08 வரை போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள், டி20 இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அதிக விமர்சனத்தை பெற்றது.

jadeja
jadeja

அதேவேளையில் ஒருநாள், டி20 இரண்டு அணியிலும் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா இடம்பெற்றிருந்ததை ரசிகர்கள் தாண்டி முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் விமர்சித்திருந்தார்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
இந்திய வரலாற்றில் முதல்முறை.. ரஞ்சி கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி!

ஹர்சித் ராணாவை விமர்சித்த சீக்கா..

தன்னுடைய யூடியூப் சேனலில் ஹர்சித் ராணா தேர்வை விமர்சித்திருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக்கொடுத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தியை எப்படி உங்களால் அணியிலிருந்து நீக்க முடியும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது வருண் சக்கரவர்த்தியை எல்லோரும் பாராட்டினார்கள். ஒருபக்கம் வருண், மற்றொரு பக்கம் ஜடேஜா என சிறப்பாக வீசினார்கள். ஜடேஜா ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டார்.

ஹர்சித் ராணா அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார், கவுதம் கம்பீரின் விரும்பமான வீரராக இருப்பதால் அணியில் இடம்பிடித்துவிட்டார் போல. அணிக்கான முதல் பெயரே ஹர்சித் ராணா பெயரை தான் எழுதுவார்கள் போல. முதல்ல சுப்மன் கில் பெயர், அதற்குபிறகு ஹர்சித் ராணா பெயர் என பட்டியலை தயாரித்திருப்பார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீக்கா பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பல ரசிகர்கள் கம்பீரின் ஃபேவரட் வீரர், கம்பீர் கோட்டா வீரர் என்று ஹர்சித் ராணாவை விமர்சித்திருந்தனர்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
கம்பீர் எழுதுற முதல் பெயரே ’ஹர்சித் ரானா’ தான் போல.. விமர்சித்த முன்னாள் இந்திய கேப்டன்!

என்னுடன் மோதுங்க என கம்பீர் ஆவேசம்..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர், ஹர்சித் ராணாவின் தேர்வுகுறித்து விமர்சித்திருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.

சீக்காவை விமர்சித்து பேசிய கவுதம் கம்பீர், “பாருங்க, இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம், நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா இருப்பேன். உங்க யூடியூப் சேனலை நடத்துவதற்காக 23 வயது இளைஞரை விமர்சிச்சா, அது நியாயமற்றது. அவருடைய அப்பா ஒரு முன்னாள் தலைவரோ அல்லது முன்னாள் கிரிக்கெட் வீரரோ அல்ல, அவர் தன்னுடைய சொந்த தகுதியில்தான் கிரிக்கெட் விளையாடிவருகிறார். தொடர்ந்து அதையே செய்வார். தனிநபர்களை குறிவைப்பது நியாயமில்லை. ஒரு வீரரை அவருடைய செயல்திறனை வைத்து விமர்சிக்கிறீர்கள் என்றால், அதை கவனிக்கவே தேர்வுக்குழுவினர் இருக்காங்க. 23 வயது இளைஞரைப் பத்தி சமூக ஊடகங்களில் மோசமாக பேசினால், அது அவருடைய மனநிலையை என்ன செய்யும்? என்று யோசித்து பாருங்கள்.

நாளை உங்கள் வீட்டு குழந்தை கிரிக்கெட் விளையாடினால், அவரை இப்படி யாராவது துஷ்பிரயோகம் செய்யும் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவர் 33 வயது அல்ல, 23 வயது சிறுவன். என்னை விமர்சியுங்கள், என்னால் அதை கையாள முடியும், ஆனால் அவர் 23 வயது சிறுவன், எனவே இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்திய கிரிக்கெட்டுக்கு என்று ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. உங்கள் யூடியூப் சேனலை நடத்துவதற்காக நீங்கள் இதுபோன்ற செயலை செய்யக்கூடாது. இது ஹர்ஷித்தின் விஷயத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் பொருந்தும்” என்று காட்டமாக பேசியுள்ளார்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
IND vs WI TEST| 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சதம்.. ஜான் கெம்ப்பெல் படைத்த சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com