‘இக்காட்டான இடத்தில் சிக்கிக்கொண்டேன்.. 2023 WC வென்றிருக்க வேண்டும்!’ எமோசனலாக பேசிய KL Rahul!

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்web

இந்தியாவில் ஒரு உலகக்கோப்பை நடக்கிறது, அதில் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடுகிறது என்றாலே, அந்த போட்டியில் இந்தியா வென்று கோப்பையை வெல்லும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் இருந்தது. 10 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிக்கிக்கொண்டது.

முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் மூன்று வீரர்கள் மட்டுமே நம்பிக்கையளிக்கும் ஆட்டத்தை விளையாடினர். 10வது ஓவரில் ரோகித் சர்மா விக்கெட்டும், முக்கியமான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட்டும் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

kl rahul
kl rahul

விக்கெட்டுகள் சரிந்தபோதும் மறுமுனையில் நிலைத்துநின்று விளையாடிய கேஎல் ராகுல், 107 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 66 ரன்னடித்து களத்தில் இருந்தார். கடைசி 10 ஓவருக்கு கேஎல் ராகுல், சூர்யகுமார் இருவரும் இருந்ததால் 290 ரன்களை எடுத்துவரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டார்க் பந்தில் சிக்சருக்கு அடிக்க முயன்ற கேஎல் ராகுல் அடிக்கவேண்டிய நேரத்தில் அவுட்டாகி வெளியேற எல்லாமே தலைகீழாக மாறியது. முடிவில் இந்திய அணி வெறும் 240 ரன்கள் மட்டுமே அடித்தது.

Rohit Sharma
Rohit Sharma

மொத்தமாக இந்திய அணி வீரர்களால் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒருவர் மட்டும் 15 பவுண்டரிகள், 4 சிக்சர்களை அடித்து போட்டியை முடித்துவைத்தார்.

கேஎல் ராகுல்
”இனி எல்லாமே எங்களுக்கு செமிஃபைனல் தான்..” மீண்டுவருவோம் என RCB பயிற்சியாளர் நம்பிக்கை!

என் வாழ்க்கையில் ஏதாவது மாற்றவேண்டும் என்றால்.. இறுதிப்போட்டியை மாற்றுவேன்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேஎல் ராகுல், உலகக்கோப்பையை வெல்லமுடியாத வருத்தத்தை மீண்டும் பகிர்ந்துகொண்டார். ஏதாவது ஒரு விசயத்தை தன் வாழ்க்கையில் மாற்றவேண்டும் என நினைத்தால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் கடைசிவரை விளையாட விரும்புகிறேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எப்படி ஸ்டார்க்கிற்கு எதிராக சிக்கிக்கொண்டேன் என்பதை வெளிப்படுத்தினார்.

kl rahul
kl rahul

கேஎல் ராகுலிடம் ஏதாவது ஒரு விசயத்தை உங்கள் வாழ்க்கையில் மாற்றவேண்டும் என நினைத்தால் எதை மாற்றுவீர்கள் என்ற கேள்வியை அஸ்வின் எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல், “எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான். மிட்செல் ஸ்டார்க்கை அட்டாக் செய்ய வேண்டுமா, தள்ளிவிடவேண்டுமா என்ற குழப்பத்தில் நான் சிக்கியிருந்தேன். அந்த குழப்பத்தில் எதிர்கொண்ட பந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது, நான் அவரைத் தாக்குவதற்கு சென்றபோது அவர் எதிர்கொள்ள கடினமான கோணத்தில் இருந்து ஒரு பந்தைவீசினார். அதனால் அவரைத் தாக்கி விளையாடுவதா, ஒரு வாய்ப்பைப் பெறுவதா என்பதில் நான் சிக்கிக்கொண்டேன்... அந்த குழப்பத்தில், முக்கியமான நேரத்தில் நான் பந்தை அடித்து வெளியேறினேன். அதை நான் மாற்ற விரும்புகிறேன்” என்று எமோசனலாக பேசினார்.

மேலும் “நான் அந்த இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். மீதமுள்ள 10-12 ஓவர்களுக்கு களத்தில் இருந்திருந்தால், நாங்கள் இன்னும் 30-40 ரன்கள் எடுத்திருக்கலாம். அங்கிருந்து எங்களால் ஒரு உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க முடியும். அதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்” என்று ராகுல் மேலும் கூறினார்.

கேஎல் ராகுல்
Hardik-க்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பில்லை? ரோகித் வைத்த பெரிய செக்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com