ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்web

”குடும்பம் அருகில் இருப்பதால் கிரிக்கெட் பாதிக்காது..” - பிசிசிஐ புதிய ரூல் குறித்து ஜோஸ் பட்லர்!

வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினருடன் சேர்ந்து தங்குவதற்கு இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், சேர்ந்திருப்பதால் கிரிக்கெட் பாதிக்கப்படாது என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
Published on

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வி என அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களின் ஒழுக்கத்தையும், அணியின் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இதுகுறித்த அறிவிப்புக்குப் பிறகு அஜித் அகர்கரிடம் பேசிய ரோகித், “இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று விதிமுறை குறித்து பிசிசிஐ செயலாளருடன் நான் பேச வேண்டும். அனைத்து வீரர்களும் என்னிடம் இதைப் பற்றித்தான் கேட்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அகார்கர் ரோகித்தைச் சமாதானப்படுத்தினார்.

இந்த புதியவிதிமுறை குறித்து பல்வேறு தரப்பினர் பேசிவரும் நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இதுகுறித்து பேசியுள்ளார்.

ஜோஸ் பட்லர்
BCCI புதிய விதிகள்: “வீரர்களின் மனைவிகளுக்கு கிரிக்கெட் தெரியாது” - முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு!

குடும்பம் அருகில் இருப்பதால் கிரிக்கெட் பாதிக்காது..

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி ஜனவரி 22 முதல் பிப்ரவரி 12-ம் தேதிவரை 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், பிசிசிஐ-ன் புதிய விதிமுறை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “குடும்பங்கள் மிகவும் முக்கியம், இந்த நவீன காலத்தில் நாங்கள் அதிகநேரம் விளையாட்டுடன் தான் இருக்கிறோம். சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் குடும்பம் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரர்களால் குடும்பத்தையும், கிரிக்கெட்டையும் பிரித்து பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தினரால் கிரிக்கெட் பெரிதும் பாதிக்காது, இது மிகவும் சமாளிக்க கூடிய ஒன்று” என்று பேசினார்.

மேலும் ”கோவிட் காலகட்டத்திற்கு பிறகு நாம் ஒவ்வொரு நாள் என்ற வீதத்தில் தான் அனைத்தையும் அணுகினோம். வீரர்கள் நீண்ட நேரம் குடும்பத்தை விட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள், அந்தவிதத்தில் குடும்பம் நம் அருகில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று” என்று பேசியுள்ளார்.

ஜோஸ் பட்லர்
சிறந்த IPL கேப்டனாக தோனி, ரோகித் உடன் பண்ட் பெயரும் சொல்லப்படும்.. LSG ஓனர் நம்பிக்கை!

பிசிசிஐ விதித்த 10 கட்டுப்பாடுகள் என்ன?

1. உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்.

2. அணியுடன் ஒரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.

3. குடும்பப் பயணத்திற்கு கட்டுப்பாடு

4. கூடுதல் உடைமைகளுக்குத் தடை

5. தனிப்பட்ட ஊழியர்களுக்குத் தடை

6. உபகரண தளவாடங்கள் எடுத்துச் செல்ல அணியின் அனுமதி

7. பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றில் வீரர்கள் இருக்க வேண்டும்.

8. சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.

9. பயிற்சி நேரத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.

10. சுற்றுப்பயணத்தின்போது தனிப்பட்ட புகைப்படம் எடுக்கக் கூடாது.

ஜோஸ் பட்லர்
”விராட் கோலி உலகம் கண்ட சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட் வீரர்..” - சவுரவ் கங்குலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com