ஜெமிமா ரோட்ரிக்ஸ் சார்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் சார்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள்web

’ஜீசஸ்-க்கு நன்றி’.. சாதனைக்கு நடுவே எழுந்த தேவையற்ற விவாதம்.. திட்டமிட்டு குறிவைக்கப்படும் ஜெமிமா?

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரலாற்று வெற்றியை தேடிக்கொடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், போட்டிக்குபிறகு பிறகு பேசிய ஜீசஸ்-க்கு நன்றி, பைபிள் வசனம் போன்ற கருத்துகள் விமர்சனத்தை பெற்றுவருகின்றன..
Published on
Summary

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஆனால், வெற்றிக்குபிறகான அவரது பேச்சு மற்றும் கடந்த ஆண்டு அவருடைய தந்தையை சுற்றி எழுந்த மதமாற்ற சர்ச்சை போன்றவை மீண்டும் விவாதமாகியுள்ளது. ஜெமிமாவின் சாதனையை மத சர்ச்சைகளுக்கு அப்பால் கொண்டாட வேண்டும்.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியா வை வீழ்த்தி இந்திய மகளிர் அணி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இமாலய இலக்கான 339 இந்த ரன்னை விரட்டிப் பிடித்து இந்திய அணி மிரட்டிவிட்டது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, நேற்றைய இரவு இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்கு முக்கியமாக வித்திட்டவர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அவர், 134 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்திய அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடும் அதே சமயத்தில், உணர்ச்சிப்பெருக்கால் அவர் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார். ஜெமிமாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்கு, பிற வீராங்கனைகள் ஆறுதல் கூறினர். பின்னர், அவள் கைகளைக் கோர்த்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ‘நன்றி’ தெரிவித்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

என்னதான் ஜெமிமா அடித்த சதம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தாலும் மற்றொரு புறம் அவரது வெற்றிக்கு பின் பேசியதை வைத்து தேவையற்ற ஒரு சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது. சர்ச்சை கிளம்பியிருக்கிறது என்பதை தாண்டி சர்ச்சை ஆக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். ஆம், ஜெமிமா பேசியதை வைத்து மட்டும் அல்ல ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த அவரது தந்தையையொட்டி எழுந்த மதமாற்ற சர்ச்சையை வைத்தும் பேசப்பட்டு வருகிறது. ஜெமிமா என்ன பேசினார், அவரது தந்தையையொட்டி நடந்த சர்ச்சை என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சார்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள்
கழுத்தில் பந்து தாக்கி இளம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மரணம்!

ஜெமிமா என்ன பேசினார்..?

இந்தப் போட்டியில் சிறந்த ஆட்டநாயகியாகத் தேர்வுபெற்ற பிறகு பேசிய ஜெமிமா, “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று கூறி பேச்சை தொடங்கினார். அவர் இத்தோடு முடித்திருந்தால் கூட இது விவாதம் ஆக்கப்பட்டிருக்காது. பைபிளில் இருந்து ஒரு வசனத்தையும் அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆம், 'நீங்கள் நிலைத்திருங்கள். கடவுள் உங்களுக்காக சண்டையிடுவார்' என்கிற பைபிளில் உள்ள ஒரு வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். மேலும், இந்த வசனத்தை நினைத்துக்கொண்டு நிதானமாக ஆடினேன்” என்று பேசியிருந்தார் ஜெமிமா. அதாவது தான் இறுதிக்கட்டத்தில் மிகவும் சோர்வாகவும், ஆற்றலை இழந்தும் இருந்த தருணத்தில் தனக்கு தானே பைபிளின் இந்த வாசகத்தை சொல்லிக்கொண்டதாக தெரிவித்தார். இதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

வெற்றிக்கு பிறகு சாதனைகள் நிகழ்த்திய பிறகு கடவுளுக்கு நன்றி சொல்வது என்பது இயல்பான ஒன்றுதான். ஒவ்வொரு வீரரும் தான் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். பல வீரர்களும் சாதனையாளர்களும் இதற்கு முன்பு இதுபோல் கூறியிருக்கிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே என புகழ்பெற்ற வாசகம் கூட நம் நினைவிற்கு வரலாம். ஆனால், வலதுசாரிகள் தரப்பில் இருந்து ஜெமிமாவின் பேச்சு விவாத பொருளாக்கப்பட்டுள்ளது. ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சைதான் பேசுபொருளாக காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சார்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள்
”என் சதத்தை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம்” - கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

தந்தையை சுற்றி எழுந்த சர்ச்சை என்ன??

ஆம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள 100 ஆண்டு பாரம்பரிய கார் ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் மதம் தொடர்பான நிகழ்வுகளை அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் நடத்தியதாகவும் அந்த நிகழ்வுகளில் மத மாற்றம் செய்ய ஊக்குவிக்கப்பட்டதாகவும் அதுதொடர்பாக சிலர் புகார் தெரிவித்ததாக கூறப்பட்டது. அந்த செய்திகள் வெளியான நேரத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் அப்பொழுது வைக்கப்பட்டது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்பொழுது இருந்த கிளப்பின் தலைவரே மறுத்து இருந்தார். “ஜெமிமாவின் ஆட்டத் திறனுக்காக 2023 ஆம் ஆண்டு அவர் உறுப்பினர் ஆக்கப்பட்டார். 3 ஆண்டுகளை வரை அதற்கு தகுதி இருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக ஒருமனதாக அவரை நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. விதியை மீறி தவறுகள் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் வழங்கப்படவில்லை. ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகி வருகிறது” என்று கார் ஜிம்கானா கிளப்பின் தலைவர் விவேக் தேவ்னானி கூறியிருந்தார்.

ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்து இருந்தார். இந்த விவகாரங்கள் முடிந்து ஓராண்டுகள் ஆகி தற்போது அது பேசுபொருளாகியிருக்கிறது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

தன்னுடைய கடினமான உழைப்பை கொடுத்து இந்தியாவுக்காக வெற்றியை ஈட்டித்தந்துள்ள இந்தியாவின் மகளை மத பேசுபொருளுக்குள் அடைப்பது தேவையற்றது. அவரது தந்தை சார்ந்த குற்றச்சாட்டுகள் தானே தவிர ஜெமிமா தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து மெருகேற்றி ஃபார்மில் இருந்து வந்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து தற்போது இந்தியாவுக்கும் முக்கியமான நேரத்தில் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். அதனால், மத சர்ச்சரவுகள் தாண்டி ஜெமிமாவை கொண்டாடுவோம்..

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சார்ந்து எழுந்துள்ள விமர்சனங்கள்
’தங்கத்த தகரம்ணு நினைச்சிட்டாங்க..’ ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஏன் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவர்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com