முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்
முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்x

’இஷான் கிஷன் ஹீரோ..’ 19 வருட SMAT வரலாற்றில் முதல் கோப்பை வென்றது ஜார்கண்ட்!

சையத் முஷ்டாக் அலி டிராபி வரலாற்றில் முதல்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது ஜார்கண்ட் அணி..
Published on
Summary

சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் அணி, கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி சதத்தால் 262 ரன்கள் குவித்து, ஹரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. இஷான் கிஷன் ஆட்டநாயகனாகவும், அனுகுல் ராய் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவின் முதன்மை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியின் 18வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்குபெற்று விளையாடும் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜார்கண்ட் மற்றும் ஹரியானா அணிகள் தகுதிபெற்றன.

2025 சையத் முஷ்டாக் அலி டிராபி
2025 சையத் முஷ்டாக் அலி டிராபி

இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. லீக் போட்டிகளில் 10 போட்டியில் 9-ல் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஜார்கண்ட்.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோசியேசன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்
19, 20 வயது வீரர்களை 28.40 கோடிக்கு வாங்கிய CSK.. யார் அந்த 2 பேர்?

முதல் கோப்பை வென்றது ஜார்கண்ட்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி, இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. ஜார்கண்ட் அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 45 பந்தில் சதமடித்து மிரட்டினார். 10 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப்போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார்.

இஷான் கிஷான் 101 ரன்கள், குமார் குஷாக்ரா 81 ரன்கள் மற்றும் கடைசியாக வந்து 20 பந்தில் 40, 14 பந்தில் 31 என விளாசிய அனுகுல் ராய், ராபின் மின்ஸ் இருவரின் பேட்டிங்கால் 20 ஓவரில் 262 ரன்கள் குவித்துள்ளது ஜார்கண்ட் அணி. சையத் முஷ்டாக் அலி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டலை குவித்தது ஜார்கண்ட் அணி.

263 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹரியானா அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து மோசமாக தொடங்கியது. 36 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து ஹரியானா தடுமாற 4வது வீரராக களம்கண்ட விக்கெட் கீப்பர் யஷ்வர்தன் 5 சிக்சர்களை பறக்கவிட்டு ஜார்கண்ட் அணிக்கு பயத்தை காட்டினார். 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்த அவரை அனுகுல் ராய் வெளியேற்றினார்.

முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்
சிஎஸ்கே வாங்கிய முதல் வீரர்.. யார் இந்த அகீல் ஹொசைன்..? WI ஆல்ரவுண்டர்!

தொடர்ந்து நிஷான் சந்து, சமந்த் ஜாகர் இருவரும் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹரியானா அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்த ஜார்கண்ட் அணி, முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்று சாதனை படைத்தது. இதுதான் அவர்களுடைய இரண்டாவது உள்நாட்டு கோப்பையாகும், இந்த சாதனையை சாத்தியமாக்கிய கேப்டன் இஷான் கிஷன் ஆட்டநாயகனாகவும், அனுகுல் ராய் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல்முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட்
Rewind 2025| டென்னிஸ் முதல் செஸ் வரை.. உலக விளையாட்டில் 8 தமிழக வீரர்கள் ஆதிக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com