சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்web

CSK கேப்டன்சிக்கு ருதுராஜ் சரியான தேர்வா..? சாம்சன் ஏன் கூடாது..? தொடர் தோல்வியால் எழும் கேள்வி!

2026 ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல்வேறு சவால்களை கொடுத்துள்ளது..
Published on
Summary

தோனி தலைமையில் ஐந்தாவது கோப்பை வென்ற சிஎஸ்கே, ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்த பிறகு தொடர்ச்சியாக சரிவை சந்தித்தது. டாக்டிக்கல் முடிவுகள், அழுத்த மேலாண்மை போன்ற கேப்டன்சி திறன்களில் கெய்க்வாட்டுக்கு குறைபாடு இருப்பதாக விமர்சனம் எழுகிறது. இதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை இறுதிப்போட்டி, பிளேஆஃப் நிலைகளுக்கு அழைத்துச் சென்ற அனுபவம் காரணமாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கே கேப்டன்சிக்கு ஏற்றவர் என்ற வாதமும் வலுப்பெறுகிறது.

2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 5வது ஐபிஎல் கோப்பை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அப்போதே தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் எதிர்காலத்தை காரணம் காட்டி ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாட முடிவுசெய்தார் மகேந்திர சிங் தோனி. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் பிளே ஆஃப் செல்ல போராடிய சென்னை அணி 5வது இடத்தில் முடித்தது. பின்னர் 2025 ஐபிஎல்லில் திரிபாத்தி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, சாம் கரன் என பல ஸ்டார் வீரர்கள் இருந்தபோதும் 10வது இடத்திலேயே முடித்தது சென்னை அணி. அணியின் சரிவை ஆரம்பத்திலேயே கண்டறிந்த நிர்வாகம், ருதுராஜ் தொடர்ந்து கேப்டனாக இருந்தால் அணியின் எதிர்காலம் பாதிக்கப்படும், அவர் மீது ரசிகர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதால் காயத்தை காரணம் காட்டி ருதுராஜை தொடரின் ஆரம்பத்திலேயே உட்காரவைத்தது அணி. அவருக்கு பதிலாக தோனியே அணியை வழிநடத்தினார்.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
One Man | ஜடேஜா வெளியேறினால் 8 ஓட்டைகள் விழும்.. CSK-க்கு இவ்வளவு பிரச்னைகளா??
dhoni - ruturaj
dhoni - ruturaj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற மிகப்பெரிய பிராண்ட் மதிப்புள்ள அணியை வழிநடத்தும் பொறுப்பும், திறனும் ருதுராஜிடம் குறைவாக இருந்ததே, அவர் தொடர்ந்து பதுக்கப்பட்டதற்கு காரணம். தோனி போன்றோ, ரோகித் சர்மா போன்றோ போட்டியின் இடையில் டாக்டிக் முடிவுகளை எடுக்கும் திறன் இதுவரை ருதுராஜிடம் நாம் பார்க்கவில்லை. ருதுராஜ் இளம் கேப்டன் தானே உடனே அந்த குவாலிட்டியை எதிர்ப்பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டால், அந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ருதுராஜுக்கு இருக்கிறது. மாறாக பவுலர்கள் பார்த்துக்கொள்வார்கள், பேட்டர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துவிட்டு வேடிக்கை பார்த்தால் வெற்றி கிடைக்காது.

அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணியை கையாள்வது கேப்டனாக அவ்வளவு சுலபமானது இல்லை என்றாலும், ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் பட்டிதார் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படும்போது ருதுராஜால் ஏன் முடியவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர்.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
2026-லும் 10வது இடம் தானா..? சிஎஸ்கே மோசமான தோல்வி! 15 பந்தில் முடித்துவிட்ட சூர்யவன்ஷி!

சஞ்சு சாம்சன் ஏன் கேப்டன்சி தேர்வாக கூடாது..?

ருதுராஜ் கெய்க்வாட்டை விட கேப்டன்சியில் அதிக அனுபவம் பெற்றவர் சஞ்சு சாம்சன், அவருடைய தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சஞ்சு தலைமையில் 2022 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ராஜஸ்தான் அணி, 2018 மற்றும் 2024-ல் பிளே-ஆஃப் வரை முன்னேறியது. மேலும் ராஜஸ்தான் அணியின் சக்சஸ்ஃபுல் கேப்டனாக ஷேன் வார்னேவிற்கு பின் சஞ்சு சாம்சனின் பெயரே இருக்கிறது.

samson - ruturaj
samson - ruturaj

இந்தசூழலில் தான் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ஏன் சஞ்சு சாம்சன் சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்கக்கூடாது என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்த பேச்சை ரசிகர்களுக்கு முன்னதாக எழுப்பியவர் ருதுராஜ் கெய்க்வாட் தான். 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடந்த உரையாடல் ஒன்றில் பேசிய ருதுராஜ், ’எனக்கு சென்னை அணியில் கேப்டன்சி குறித்த எந்த எண்ணமும் இல்லை என்றும், எனக்கு இங்கு எப்படி இருந்தாலும் பிடிக்கும் என்று கூறினேன், அதற்கு சாம்சன் இது உங்களுடைய அணி, நீங்கள் தான் கேப்டனாக இருக்கவேண்டும், உங்களுக்கு கீழ் வீரராக விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என்று கூறியதாக வெளிப்படுத்தியிருந்தார்.

samson - ruturaj
samson - ruturaj

ஒரு பக்கமுள்ள ரசிகர்கள் கெய்க்வாட் இடமிருந்து கேப்டன்சியை சஞ்சு சாம்சனுக்கு கொடுக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்திருந்தாலும், மறுபக்கம் ஒரு சீசனில் மட்டுமே ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டுள்ளார், 5 ஆண்டுகளாக ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன்கள் இருந்துமே மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை, அதனால் ருதுராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற ஆதரவு குரலையும் ரசிகர்கள் கொடுத்துவருகின்றனர். அணி காம்பினேஷனையும், வீரர்கள் பேட்டிங் வரிசையையும் மாற்றி சென்னை அணி தவறான முடிவுகளை எடுத்துவரும் நிலையில், சரியான பிளேயிங் 11-ஐ கண்டுபிடித்துவிட்டாலே சிஎஸ்கே வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
-4 புள்ளிகளுடன் கடைசி இடம்.. சிஎஸ்கே படுதோல்விக்கான 3 காரணங்கள் என்ன..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com