மகளிர் உலகக்கோப்பை ஃபைனல்| டாஸ் வென்றது தென்னாப்ரிக்கா.. இந்தியா முதலில் பேட்டிங்!
2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம், நவி மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களின் முதல் உலகக்கோப்பைக்காக மோதுகின்றன. ரசிகர்கள் யாருக்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2025 மகளிர் உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. அரையிறுதிப்போட்டிகளில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும், 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தின..
இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் உலகக்கோப்பைக்காக இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், போட்டியானது நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடக்கவிருக்கிறது..
மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இரண்டு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் சென்றுள்ளனர். யாருக்கு முதல் உலகக்கோப்பை வசப்படப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்திய அணி: ஷஃபாலி வெர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்
தென்னாப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட்(கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிசான் கேப், சினாலோ ஜாஃப்டா(விக்கெட் கீப்பர்), அன்னேரி டெர்க்சன், க்ளோ ட்ரையன், நாடின் டி க்ளெர்க், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா

