மகளிர் யு19 டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியன் இந்திய அணி அறிவிப்பு! தொடர் குறித்த முழு விவரம்!
2025 மகளிர் யு19 டி20 உலகக்கோப்பை தொடரானது மலேசியாவில் ஜனவரி 18 முதல் தொடங்கி பிப்ரவரி 2 வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா. நேபாள், நைஜீரியா முதலிய 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோத உள்ளன.
இந்திய அணியானது குரூப் ஏ-ல் நடப்பு சாம்பியன் அணியான இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுடன் இடம்பிடித்துள்ளது.
முந்தைய 2023 மகளிர் யு19 டி20 உலகக்கோப்பையை ஷாபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்தமுறை நிகி பிரசாத் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா ஜனவரி 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் இந்தியா தன்னுடைய கோப்பை பயணத்தை தொடங்குகிறது.
இந்திய அணி விவரம்..
2025 மகளிர் யு19 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நிகி பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தலைமையில் சமீபத்தில் நடந்த யு19 ஆசியக்கோப்பையை இந்தியா வென்றிருந்த நிலையில், டி20 உலகக்கோப்பையும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ உள்ளது.
இந்திய அணி ஸ்குவாட்: நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே (துணை கேப்டன்), ஜி த்ரிஷா, ஜி கமாலினி (விக்.கீப்பர்), பவிகா அஹிரே (விக்.கீப்பர்), ஈஸ்வரி அவசரே, மிதிலா வினோத், விஜே ஜோஷிதா, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி.ஷப்னம், வைஷ்ணவி எஸ்
பேக்கப் வீரர்கள்: நந்தனா எஸ், இரா ஜே, அனாதி டி
தொடர் குறித்த விவரங்கள்:
குரூப் ஏ - இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை
குரூப் பி - இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா
குரூப் சி - நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நைஜீரியா மற்றும் சமோவா
குரூப் டி - ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் ஸ்காட்லாந்து
4 பிரிவுகளில் இடம்பெற்றுள்ள 16 அணிகள் குரூப் ஸ்டேஜ்ஜில் 41 போட்டிகளில் மோதுகின்றன. பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள், இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 பட்டியலுக்கு முன்னேறும். அங்கிருந்து பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டியில் மோதும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரையிறுதி போட்டிகள் ஜனவரி 31ம் தேதியும், இறுதிப்போட்டி ஜனவரி 2ம் தேதியும் மலேசியா கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது.