\
indian test team
indian test teamreuters

100 போட்டிக்கு 35 ஆண்டுகள்.. சுதந்திர தினத்தில் மகுடம் சூடிய இந்தியா! அதிக அணிகள் செய்யாத சாதனை!

சுதந்திர தினமான இன்றைய நாளில் 600வது டெஸ்ட் போட்டியில் களம்கண்டு சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
Published on
Summary

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600வது போட்டியை இலங்கையின் காலே மைதானத்தில் சுதந்திர தினத்தன்று ஆடி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த 3வது அணியாக இந்தியா மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. 1932 லார்ட்ஸ் முதல் டெஸ்டில் தொடங்கி, 100வது, 200வது, 300வது, 400வது, 500வது போட்டிகளில் தோல்வி, டிரா, வெற்றிகள் என பல கேப்டன்கள் வழிநடத்திய பயணம் இன்று கில் தலைமையில் புதிய உச்சியை தொட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவின் சுதந்திர தினமான இன்றைய நாளில் இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 3வது உலக அணியாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1000 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடி முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 800 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்தபடியாக இந்த மாபெரும் மைல்கல்லை எட்டிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் 596 டெஸ்ட்களுடன் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. மற்ற எந்த அணிகளும் 500 போட்டிகளை கூட இன்னும் எட்டவில்லை.

ind vs sl
ind vs slbcci

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரையில் முதல் 100 டெஸ்ட் போட்டிகளை கடக்க 35 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. கடந்த 1932ஆம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த முதல் போட்டியில் இருந்து 100வது டெஸ்ட் போட்டியை எட்ட இந்தியாவிற்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அதற்குபிறகு கிரிக்கெட் உலகில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியா, அடுத்தடுத்த 100 போட்டிகளை வெறும் 10 ஆண்டுகள் வித்தியாசத்தில் கடந்து விரைவாகவே இந்த மைல்கல் சாதனையை எட்டி சாதித்துள்ளது. அதாவது 400வது போட்டியை 2006-ல் கடந்த இந்தியா, 500வது போட்டியை 2016-லும், 600வது போட்டியை இன்றைய நாளான 2026-லும் கடந்து மகுடம் சூடியுள்ளது.

indian test team
’விராட் கோலியை இழந்தது டெஸ்ட் கிரிக்கெட்..’ ஏன் அவர் தலைசிறந்த TEST கேப்டன்? 4 காரணங்கள்!

100வது, 200வது...500வது போட்டியில் என்ன நடந்தது?

இந்தியாவின் வெற்றிகளை பொறுத்தவரையில் 1932-ல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை காற்றில் பறக்கவிட்ட முகமது நிசாரின் அற்புதமான பந்துவீச்சு இருந்தபோதும், இங்கிலாந்து அணி மீண்டுவந்து அசாத்தியமான வெற்றியை உறுதிசெய்தது. இந்தியா தோற்றபோதும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த நிசார் இந்தியாவின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

india first test
india first testJiostar India Pvt Ltd

100வது டெஸ்ட்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் விளையாடிய இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் 200வது போட்டியை பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் விளையாடிய கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி மொஹிந்தர் அமர்நாத்தின் அபாரமான சதத்தால் போட்டியை டிரா செய்தது.

indian test team
GT-க்கு வரவிரும்பும் ஹர்திக்! ‘எங்க கேப்டன் சொன்னாதான்..’ குஜராத் வைத்த செக்.. கில் சொன்ன பதில்!
india 300th test - vvs laxman
india 300th test - vvs laxmanJiostar India Pvt Ltd

தோல்வி, ட்ரா என சென்றுகொண்டிருந்த இந்த ரெக்கார்டை 300வது டெஸ்ட் போட்டியில் மாற்றிக்காட்டினார் அப்போதைய இந்திய டெஸ்ட் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் 2வது இன்னிங்ஸில் தோல்வியின் நிலையிலிருந்த இந்தியாவை விவிஎஸ் லக்‌ஷ்மன் 51 ரன்கள் அடித்து காப்பாற்றினார். அது அவருடைய அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.

Rahul Dravid
Rahul Dravid Reuters

அதேபோல 400வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை அவர்களுடைய மண்ணில் எதிர்கொண்ட டிராவிட் தலைமையிலான இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. ஒவ்வொரு 100வது போட்டியின் போதும் வெவ்வேறு டெஸ்ட் கேப்டன்களை கொண்டிருந்த இந்தியா, 500வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டனான கோலி தலைமையில் கான்பூரின் புகழ்பெற்ற கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடியது. நியூசிலாந்துக்கு எதிரான இந்தப்போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஸ்பின் ஜோடியின் மாயாஜாலத்தால் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா.

Shubaman Gill
Shubaman GillReuters

இந்தவரிசையில் தற்போது சுப்மன் கில் தலைமையில் இலங்கைக்கு எதிராக களம்கண்டிருக்கும் இந்தியா, 600வது டெஸ்ட் போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

indian test team
என்ன பெரிய பாக்ஸிங் டே டெஸ்ட்.. பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா!?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com