டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ஏ அணி
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ஏ அணிx

2026 T20 WC பயிற்சி போட்டி| இந்தியாவுக்கு USA பதிலடி.. 200 ரன்கள் அடித்து இறுதிவரை போராட்டம்!

இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் 200 ரன்கள் அடித்து அமெரிக்கா பதிலடி கொடுத்தது..
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி அமெரிக்காவை எதிர்கொண்டு 238 ரன்கள் குவித்தது. நாராயண் ஜெகதீசன் 49 பந்தில் சதமடித்து அசத்தினார். அமெரிக்கா 200 ரன்கள் சேர்த்து போராடியது. ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பை

இந்தசூழலில் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், இன்று முதல் பயிற்சி ஆட்டங்களில் அனைத்து அணிகளும் பங்கேற்கவிருக்கின்றன.

அந்தவகையில் முதல் பயிற்சி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது இந்திய ஏ அணி.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ஏ அணி
SL vs ENG| சொந்த மண்ணில் மரண அடி வாங்கிய இலங்கை.. ODI, T20 தொடர் இரண்டையும் இழந்து சோகம்!

இந்தியா 238.. அமெரிக்கா 200!

2026 டி20 உலகக்கோப்பைக்கான முதல் டி20 போட்டியில் ஆயுஸ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 238 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் 49 சதமடித்து அசத்தினார்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணியும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இறுதிவரை போராடிய அமெரிக்க அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் சேர்த்தது. ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணி அடுத்த பயிற்சி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ஏ அணி
2026 டி20 WC பயிற்சி ஆட்டம்| 49 பந்தில் சதமடித்த ஜெகதீசன்.. 238 ரன்கள் குவித்த இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com