mi vs rr
mi vs rrcricinfo

நேருக்கு நேர் 16-14.. சூர்யவன்ஷியை எப்படி சமாளிக்கப் போகிறது MI.. வெற்றிபெறுமா RR..?

2026 ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நேருக்கு நேர் கணக்கில் மும்பை 16-14 என முன்னிலையில் இருந்தாலும், சமீபத்திய ஃபார்மில் ராஜஸ்தான் அணி வலுவாக உள்ளது. குறிப்பாக 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ஹெட்மயர் ஆகியோரின் ஆட்டம் மும்பைக்கு சவாலாக இருக்கும்.

2026 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. ஒருபக்கம் 5 கோப்பைகளை வென்ற OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, மறுபக்கம் நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் கடந்தமுறை இறுதிப்போட்டியில் கோப்பையை தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் என போட்டி இந்தமுறை வலுவானதாக இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அடுத்தடுத்த 2 வெற்றிகளுக்கு பிறகு வரும் ராஜஸ்தான் அணியும், ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் வரும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

mi vs rr
”ஃபிளெமிங் நல்ல COACH-னு சொன்னா ஒத்துக்க மாட்டேன்..” பகிரப்படும் பதானி பேசிய வீடியோ!

நேருக்கு நேர் 16-14

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 31 முறை மோதியிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுமே சரிசமமான வெற்றிகளை பதிவுசெய்துள்ளது. மும்பை 16 வெற்றிகளுடனும், ராஜஸ்தான் 14 வெற்றிகளுடன் நீடிக்கிறது. ஆனால் கடைசி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று மும்பை அணியின் கைகளே ஓங்கியிருக்கிறது.

இந்தமுறை ராஜஸ்தான் அணியில் ஃபார்மில் இருந்துவரும் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஃபார்மிற்கு திரும்பியிருக்கும் நிலையில், இந்த ஓப்பனிங் ஜோடி மும்பைக்கு சவால்தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி
ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி
mi vs rr
தோனியே வேண்டாம் என மறுத்த STRATEGY.. மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் CSK! விளாசும் முன்.வீரர்கள்!

15 வயது சூர்யவன்ஷியை விரைவாக வெளியேற்ற மும்பை அணி பும்ராவிற்கு செல்லுமா அல்லது மற்ற பவுலர்கள் சிறப்பாக வீசுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர் போன்ற வீரர்கள் ஃபார்மில் இருப்பது ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் வலுசேர்க்கிறது.

பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஸ்பாண்டே, நான்ரே பர்க்கர், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஸ்னோய் என நல்ல பவுலிங் அட்டாக்கை ராஜஸ்தான் வைத்துள்ளது. ஆன் பேப்பரில் மும்பை சிறந்த அணியாக இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் தோல்வியிலிருந்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியிலிருந்தும் வருவது ஆட்டத்தை சுவாரசியமானதாக மாற்றுகிறது.

mi vs rr
CSK-வின் சிறந்த பிளேயிங் 11.. 7 பௌலிங் ஆப்சன்.. NO.9 வரை பேட்டிங்! இதை செய்யுமா நிர்வாகம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com