தோனி - ஃபிளெமிங் - பதானி
தோனி - ஃபிளெமிங் - பதானிpt

”ஃபிளெமிங் நல்ல COACH-னு சொன்னா ஒத்துக்க மாட்டேன்..” பகிரப்படும் பதானி பேசிய வீடியோ!

யாராவது என்கிட்ட வந்து ஃபிளெமிங் நல்ல கோச்னு சொன்னா ஒத்துக்க மாட்டேன் என்று ஹேமங் பதானி முன்பு பேசிய வீடியோ மீண்டும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Published on
Summary

இந்திய முன்னாள் வீரர், பல பிரான்சைஸ் கோப்பைகளை வென்ற பயிற்சியாளர் ஹேமங் பதானி, சிஎஸ்கே வெற்றிக்கு காரணம் தோனி மட்டுமே என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் நல்ல கோச் அல்ல என்றும் கூறிய பழைய வீடியோ மீண்டும் வைரலாகிறது. ஐபிஎல்லைத் தவிர வேறு எந்த லீக்கிலும் ஃபிளெமிங் கோப்பை வெல்லவில்லை, தோனியின் இந்திய வீரர்களை கையாளும் திறமையே சிஎஸ்கே வெற்றிக்கு அடிப்படை என அவர் வலியுறுத்துகிறார்.

இந்தியாவிற்காக 4 டெஸ்ட் போட்டிகள், 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹேமங் பதானி, பயிற்சியாளராக செல்லும் இடமெல்லாம் கோப்பை வென்று சம்பவம் செய்துவருகிறார். இதுவரை டிஎன்பிஎல்லில் 4 கோப்பைகள், லங்கா பிரீமியர் லீக்கில் 3 கோப்பைகள், SA20 லீக், ILT20 லீக்கில் கோப்பைகள் என 9 பிரான்சைஸ் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

ILT20 லீக்கில் ஹேமங் பதானி தலைமையில் முதல் கோப்பையை துபாய் கேபிடல்ஸ் வென்றிருக்கும் நிலையில், அதன் தாய் அணியான டெல்லி கேபிடல்ஸுக்கும் ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பதானி தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தசூழலில் தான் கடந்தாண்டு தமிழ்நாடு கிரிக்கெட்டர் யோ-மகேஷ் உடனான உரையாடலில், சிஎஸ்கே கோச் ஃபிளெமிங் குறித்து பேசிய ஹேமங் பதானியின் வீடியோ மீண்டும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தோனி - ஃபிளெமிங் - பதானி
CSK-வின் சிறந்த பிளேயிங் 11.. 7 பௌலிங் ஆப்சன்.. NO.9 வரை பேட்டிங்! இதை செய்யுமா நிர்வாகம்..?

ஃபிளெமிங் நல்ல COACH கிடையாது..

தோனி தலைமையில் 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றிருந்தாலும், 2023-க்கு பிறகு தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சிஎஸ்கே படுமோசமாக செயல்பட்டு வருகிறது.

இந்தசூழலில் தான் தோனியால் தான் சிஎஸ்கே 5 முறை கோப்பை வென்றது என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் கோச்சாக இருந்தாலும் அவர் நல்ல கோச் கிடையாது என்றும், ஐபிஎல்லை தவிர அவரால் வேறு எங்கேயும் கோப்பை வென்றதில்லை என்றும் ஹேமங் பதானி கூறியுள்ளார்.

யோ மகேஷ் உடனான உரையாடலில் பேசிய ஹேமங் பதானி, “சிஎஸ்கேவில் தோனி இருக்கிறார், ஃபிளெமிங் இருக்கிறார். ஆனால் தோனி தான் அனைத்தையும் பார்த்துக்கிறார், அது எல்லாருக்குமே தெரியும். இப்போ ஃபிளெமிங் இவ்ளோ பெரிய கோச்சாக இருக்கார் என்றால், ஐபிஎல் தவிர்த்து வேற எங்கயும் அவர் ஜெயிச்சதே கிடையாது. SA20, ஹண்ட்ரட், பிக்பேஷ் லீக் என எதுலையும் அவர் ஜெயிச்சது கிடையாது, ஏன் நியூசிலாந்துக்கு அஸிஸ்டண்ட் கோச்சா இருந்தபோதும் அவருக்கு வெற்றி கிடையாது. அதனால ஃபிளெமிங் வந்து நல்ல கோச்னு யாராவது என்கிட்ட சொன்னாங்கனா நான் ஒத்துக்க மாட்டேன். தோனியால தான் சிஎஸ்கே ஜெயிக்கிறாங்க, அவர் தான் அந்த டீமோட ராஜா. அவர் ஒரு இந்தியன், அவருக்கு எப்படி இந்திய வீரர்களிடமிருந்து சிறந்ததை கொண்டுவர வேண்டும் என்று தெரியும். ரோகித் சர்மாவும் அப்படி தான், அவரும் ஒரு இந்தியர் என்பதால் தான் 6 கோப்பைகளை வென்றார். ஐபிஎல் அணிகளை இந்திய பயிற்சியாளர்கள் வழிநடத்த வேண்டும், இதை புரிந்துகொள்ளும் பிரான்சைஸ் தான் நன்றாக செயல்படும்” என பேசியிருந்தார்.

அவர் அப்போது பேசிய வீடியோ, தற்போது சென்னை அணி தோனி இல்லாமல் தொடர்ந்து மோசமாக சொதப்பிவரும் நிலையில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தோனி - ஃபிளெமிங் - பதானி
“எங்கிருந்தோ வந்த தோனி கேப்டன் ஆக்கப்பட்டார்..” - 18 வருட ஏமாற்றத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!
தோனி - ஃபிளெமிங் - பதானி
உடையும் தோனி கட்டமைத்த கோட்டை.. CSK அணியில் இருக்கும் 4 பெரிய ஓட்டைகள்! முடிவு தான் என்ன..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com