இந்தியா - இங்கிலாந்து
இந்தியா - இங்கிலாந்துweb

”இங்கிலாந்து ஆபத்தான அணி..” இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலியா வீரர்!

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது இந்திய அணி.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதவிருக்கின்றன. இங்கிலாந்து அணியின் ஆபத்தான ஆட்டத்தை முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குரூப் சுற்றில் சுமாராக இருந்தாலும், சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

2026 டி20 உலகக்கோப்பை பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படும் நிலையில், நாளை மறுநாள் நடக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவிருக்கின்றன.

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்கா

குரூப் போட்டிகளில் இங்கிலாந்து அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து
டி20 உலகக்கோப்பை| யாரும் நெருங்க முடியாத கோலியின் சாதனை.. உடைத்தார் சஞ்சு சாம்சன்!

இங்கிலாந்து ஆபத்தான அணி..

2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிகள் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் க்ளென் மெக்ராத், “இங்கிலாந்தை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அவர்கள் ஒரு ஆபத்தான அணி, அவர்களுக்கு அன்றைய நாளாக இருந்தால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். குரூப் சுற்று போட்டிகளில் சில ஆட்டங்கள் இங்கிலாந்திற்கு பாதகமாக சென்றிருந்தாலும், தற்போது எப்படி வெல்ல வேண்டும் என்ற வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

க்ளென்மெக்ராத்
க்ளென்மெக்ராத்
இந்தியா - இங்கிலாந்து
’நம் மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது..’ சாம்சனுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர், மோகன்லால், மம்மூட்டி!

இதுவரையிலும் இந்தியா விளையாடியதை போலவே முன்னேறினால் வெற்றிபெறமுடியும் என்றாலும், இங்கிலாந்து அணி சவால் கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறினார்.

மேலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறக்கூடிய என்னுடைய அணிகளாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து
”இந்த 2 பேர் தான் உலகின் சிறந்த டி20 பவுலர்கள்..” - ஆஸ்திரேலியா ஜாம்பவான் மெக்ராத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com