’யூசுப் பதான்’ துருப்பு சீட்டு.. முக்கிய தொகுதியில் காங்கிரஸுக்கு எதிராக போட்டி! TMC-ன் பெரிய மூவ்!

2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் சூழலில், தேர்தலில் போட்டியிடக்கூடிய 42 தொகுதி வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் ஈர்க்கக்கூடிய ஒன்றாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டிஎம்சி-ல் போட்டியிடுகிறார்.
யூசுப் பதான் - மம்தா பானர்ஜி
யூசுப் பதான் - மம்தா பானர்ஜிweb

இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான யூசுப் பதான், தற்போது புதிய களத்தில் பேட்டிங் செய்ய தயாராகியுள்ளார். தன்னுடைய அசாதாரணமான பேட்டிங் யுக்தியால் இந்திய கிரிக்கெட்டில் பல அதிரடி ஆட்டங்களை விளையாடிய யூசுப் பதான், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2012 மற்றும் 2014 என இரண்டு கோப்பைகளை வெல்லும் அணியில் முக்கிய பங்காற்றினார். அப்போதிலிருந்து யூசப் பதானுக்கும், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இடையேயான தொடர்பு வேரூன்றியிருந்தது.

யூசுப் பதான்
யூசுப் பதான்

இந்நிலையில் தான் தற்போது எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக போட்டியிடவிருக்கிறார் யூசுப் பதான். இதனை கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

யூசுப் பதான் - மம்தா பானர்ஜி
முத்தையா முரளிதரனின் உலக சாதனையை தகர்த்த அஸ்வின்! 100வது டெஸ்ட் போட்டியில் 3 இமாலய சாதனைகள்!

காங்கிரஸுக்கு எதிராக களமிறக்கப்படும் யூசுப் பதான்!

மார்ச் 10ம் தேதியான இன்று கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் ஜோனோகோர்ஜோன் சபா என்ற பிரச்சார கூட்டத்தின் நிகழ்வில், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் தொகுதியின் விவரங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூரில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எப்போதும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக யூசுப் பதான் களமிறக்கப்படுகிறார்.

இந்திய கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருந்தாலும் மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்குவதில் காங்கிரஸுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையேயான மோதல் சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது. தேசிய அளவில் ஒன்றாக இருந்தாலும் மாநில அளவில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்த மம்தா பானர்ஜி, காங்கிரஸால் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் கூட வெல்லமுடியாது என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார்.

இந்நிலையில் தான் காங்கிரஸின் கோட்டையாக இருந்துவரும் பஹரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுக்க விருப்பமில்லாமல் யூசுப் பதானை களமிறக்கியுள்ளார் மம்தா பானர்ஜி. பஹரம்பூர் தொகுதியில் 1999 முதல் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் களத்தில் சிக்சர்களாக பறக்கவிடும் யூசுப் பதான், அரசியல் களத்தில் என்னசெய்யப்போகிறார் என்று பொறுந்திருந்து பார்ப்போம்.

யூசுப் பதான் - மம்தா பானர்ஜி
“அவர்களும் மனிதர்கள்தான்; ரோபோக்கள் அல்ல”- இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com