சூர்யகுமார் யாதவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் அஸ்வின்
சூர்யகுமார் யாதவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் அஸ்வின்web

“தயவுசெய்து ஆட வராதீங்க..” கேப்டன் சூர்யகுமாரை விளாசிய முன்னாள் இந்திய வீரர்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் படுமோசமாக செயல்பட்டது. பும்ரா ஒருவரை தவிர மற்ற வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணியின் தயாரிப்பு பற்றிய விமர்சனத்தை முன்னாள் இந்திய வீரர் அஸ்வின். சூர்யகுமாரின் ஆட்டத்தை குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியின் தயாரிப்பின்மை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராகவும் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, தற்போது அரையிறுதிக்கு செல்லுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி நெட் ரன்ரேட்டில் -3.800 என அதள பாதளத்திற்கு சென்றுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்காweb

மீதமிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக வென்றால் கூட இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற உத்தரவாதம் கிடையாது.

இந்தநிலையில் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை விளாசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் அஸ்வின்
'நீ சிங்கம் தான்..' தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு பின் கொண்டாடப்படும் கோலி!

தயவுசெய்து ஆட வராதீங்க..

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய போது ‘அவர்கள் சரியாக தயாராகவில்லை’ என விமர்சித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது இந்திய அணியையும் அதே கருத்தை கூறி விளாசியுள்ளார்.

தன்னுடைய ஹிந்தி யூடியூப் சேனல் வீடியோவில் பேசியிருக்கும் அஸ்வின், “தயவுசெய்து போட்டிக்கு தயாராகாமல் வென்றுவிடலாம் என களத்திற்கு வராதீர்கள். இந்த மோசமான ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி இந்த போட்டிக்கு தயாராகவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மெதுவான பந்தை மட்டுமே அதிகமாக வீசியது. அதிலும் சூர்ய குமாருக்கு எதிராக 22 பந்துகளில் 17 பந்துகள் மெதுவாக வீசப்பட்டன. அவர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் தரமான அணியாக விளங்கினர்” என பாராட்டியுள்ளனர்.

சூர்யகுமார் யாதவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் அஸ்வின்
டி20 உலகக்கோப்பை| இந்தியா அரையிறுதி செல்லுமா..? இருக்கும் 2 வழிகள் என்ன..?

அவரின் கருத்தின் படி தென்னாப்பிரிக்கா அணி ஒவ்வொரு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் தயாராகி வந்துள்ளனர். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு எதிராக எந்த திட்டமும் இல்லாமல் வந்துள்ளனர் என தெரிகிறது. இந்திய அணியின் தயாரிப்பு இல்லாத இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதில் தவறில்லை.

சூர்யகுமார் யாதவை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் அஸ்வின்
’அவர்களை மூச்சுவிட அனுமதி.. துன்புறுத்தாதே’ - அமீர் உடன் இந்தியாவை ட்ரோல் செய்த மற்றொரு PAK வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com