virat kohli getting praised after india lost against sa
virat kohli getting praised after india lost against saweb

'நீ சிங்கம் தான்..' தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு பின் கொண்டாடப்படும் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் GOAT, King, Chase master என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நட்சத்திர வீரர் விராட் கோலி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியாவின் படுதோல்விக்கு பிறகு கொண்டாடப்பட்டு வருகிறார். என்ன காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்..
Published on
Summary

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, விராட் கோலியின் சேஸிங் திறமை மீண்டும் பேசப்படுகிறது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் சொதப்பலே காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கோலியின் முன்னாள் சாதனைகள் மற்றும் அவரது அருமையான பேட்டிங் திறமை மீண்டும் நினைவுகூரப்படுகிறது. இதனால், கோலியின் புகழ் மேலும் உயர்ந்துள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் என்ற இலக்கைத் எட்ட முடியாமல் 111 ரன்களுக்குச் சுருண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, சேஸிங் மாஸ்டர் விராட் கோலியின் அருமையை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - தென்னாப்பிரிக்கா

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணி முதலில் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்தாலும் பின் நேர்த்தியாக செயல்பட்டு ரன்களை குவித்தது. இந்தியாவுக்கு 187 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது தென்னாபிரிக்கா. களத்தில் இறங்கிய இந்திய அணி உப்பு சப்பு இல்லமால் ஆடியதால் 18.5 ஓவர்களிலேயே மொத்த விக்கெட்டையும் இழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

பும்ரா
பும்ரா

இந்திய அணியின் ஸ்ட்ராட்டர்ஜி மற்றும் பேட்ஸ்மேன்களின் சொதப்பலே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒருபக்கம் விக்கெட் சரியும்போது மறுபக்கம் நிலைத்து நின்று அணியை பேட்டிங்கில் வழிநடத்த கோலிபோல ஒருவர் வேண்டும் என்றும், இப்படியான தருணத்தில் Chase Master விராட் கோலி இருந்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது என்றும் ரசிகர்கள் குமுறி வருகின்றன.

virat kohli getting praised after india lost against sa
டி20 உலகக்கோப்பை| இந்தியா அரையிறுதி செல்லுமா..? இருக்கும் 2 வழிகள் என்ன..?

விராட் கோலி கொண்டாடப்பட காரணம் என்ன?

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாகத் எட்டியது மூன்று முறை மட்டும் தான்.

2014ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 176 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது, 2016ஆம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 161 ரன்களும் மற்றும் 2022ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்த மூன்று சிறப்பான வெற்றிகளிலும் அணியை காப்பாற்றிய ஹீரோவாக விராட் கோலி என்ற ஒற்றை பேட்ஸ்மேன் மட்டும் தான் இருக்கிறார். 3 போட்டிகளில் சேஸிங்கில் மிரட்டிய கிங் கோலி 72, 82 மற்றும் 82 ரன்கள் எனக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இப்படியான ஒரு சேஸ் மாஸ்டரை ஸ்ட்ரைக் ரேட் சரியில்லை என விமர்சித்தவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என்றும், தற்போது அவர்களுக்கு விராட் கோலியின் அருமை புரிந்திருக்கும் என்றும் ரசிகர்கள் கிங் கோலிக்கு புகழாரம் சூட்டிவருகின்றனர்.

virat kohli getting praised after india lost against sa
’அவர்களை மூச்சுவிட அனுமதி.. துன்புறுத்தாதே’ - அமீர் உடன் இந்தியாவை ட்ரோல் செய்த மற்றொரு PAK வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com